தூத்துக்குடி: சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு Rotary Trail Blazers அமைப்பு சார்பில் "பெண் குழந்தைகளைக் காப்போம்" எனும் விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் தூத்துக்குடியில் நடைப்பெற்றது. இதில் சமூகநலத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் கலந்துக்கொண்டு பிரச்சாரத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது, "பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து புகார் அளிப்பதற்கு முன் வராமல் இருந்தனர். தற்போது அரசு எடுக்கும் நடவடிக்கையின் காரணமாக, பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் அளிக்கின்றனர். பெண்கள் புகார் அளிப்பதற்காக 181, 1098 ஆகிய எண்கள் வழங்கப்படுள்ளது.
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு Rotary Trail Blazers அமைப்பு சார்பில் " பெண் குழந்தைகளைக் காப்போம்" எனும் விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தை தூத்துக்குடியில் துவக்கி வைத்தபோது.@mkstalin @CMOTamilnadu @Udhaystalin @KanimozhiDMK pic.twitter.com/EIqQxrOX5n
— P. Geetha Jeevan (@geethajeevandmk) October 10, 2024
பள்ளிப் பாட புத்தகங்களில் இந்த உதவி எண்கள் அச்சிடப்பட்டுள்ளதால் அனைவரும் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள், அடிமையாக வைத்திருத்தல், கொத்தடிமை போல் வேலை வாங்குதல், படிக்க அனுமதிக்காமல் வேலை வாங்குவது, மன உளைச்சல் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அரசு வழங்கியுள்ள சேவை எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
புகார் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கவனமாக வளர்க்க வேண்டும். பெண் குழந்தைகள் அறிமுகமானவர்களிடம் கவனமாக இருத்தல் வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நாட்டு நடப்பை எடுத்து கூறி வளர்க்க வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜயின் தவெக மாநாட்டிற்கு துபாய் நிறுவனம் பாதுகாப்பு... புஸ்ஸி ஆனந்த் சொன்ன தகவல்