ETV Bharat / state

அதிமுகவை ஏன் பிரதமர் ஏதும் சொல்வதில்லை? - துரைமுருகன் கேள்வி! - அதிமுக பாஜக கூட்டணி

Duraimurugan: ஸ்டாலின் குடும்பத்தையும், திமுகவையும் அழிப்பேன் எனக் கூறும் பிரதமர், அதிமுகவை எதுவுமே சொல்வதில்லை எனவும், ஏதேனும் உள்ளடி வேலை நடக்கிறதா என அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் கேள்வி
பிரதமர் அதிமுகவை ஏன் ஏதும் சொல்வதில்லை, ஏதேனும் உள்ளடி வேலை நடக்கிறதா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 5:29 PM IST

Updated : Mar 6, 2024, 5:43 PM IST

சென்னை: சென்னை தெற்கு மாவட்டம், சைதை கிழக்கு பகுதி திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம், சென்னை கிண்டி மடுவின்கரை பகுதியில் இன்று (மார்ச் 6) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியபோது, “முதல்வர் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், சென்னை தெற்கில் தினந்தோறும் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 1.5 லட்சம் பேர் பிறந்தநாள் நிகழ்சிகள் மூலம் பயனடைந்துள்ளனர். வயது மூத்தோருக்கான மருத்துவமனை மூலம் தினந்தோறும் 100 முதியோர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக அளவில் பேசக்கூடிய வகையில், சென்னை சைதாப்பேட்டையில் வயது மூத்தோருக்கான மருத்துவமனை தற்போது புதிதாக திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

30 மாத காலத்தில் 1,500 கோடி செலவில் அடையாறு ஆற்றை தூர்வாரி, பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சைதாப்பேட்டை முதல் திரு.வி.க மேம்பாலம் வரை அடையாறு ஆற்றை தூர்வாரி, கரையோரம் 4 பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது” என கூறினார்.

இதையடுத்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “சைதை பகுதி ஒரு சகோதரத்துவத்துடன் கூடிய பகுதியாக உள்ளது. இங்கு நிறைய இஸ்லாமியர்கள் உள்ளனர். ஆனால், பாஜகவினருக்கு இஸ்லாமியர்கள் எதிரிகள். மக்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம், உடமைக்கு பாதுகாப்பு இவை நான்கையும் ஒரு அரசு செய்து தர வேண்டும். அதுவே ஒரு நல்ல ஆட்சி. இல்லையென்றால், அது காட்டாட்சி.

திராவிட இயக்கத்தினர் ஒரு தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள். மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஒரு போர்க்களம் தற்போதைய தளபதி தலைமையிலான ஆட்சிக்காலம். இதனை சாத்தியப்படுத்த காரணமாக இருப்பவர், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

3 ஆண்டு காலத்தில் எவரும் கை நீட்டி குற்றச்சாட்டு சொல்லும் வகையில், முதல்வர் ஆட்சி நடத்தவில்லை. மாறாக, அனைவரும் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறார். பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வரை தொலைத்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். சிங்கத்திற்கு பிறந்த குட்டி, இது சலசலப்பிற்கு அஞ்சாது. எந்த நிலையிலும் தன்மானத்தை விட்டுவிடக் கூடாது என்று தலைவர் கருணாநிதி கூறுவார்.

திட்டங்களுக்குப் பதிலாக உணர்வுகளுக்கு முதல்வர் மதிப்பளித்துள்ளார். 71 வயதில் தாயாக மாறி, குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் வகையில், காலை உணவுத் திட்டத்தை முதல்வர் கொண்டு வந்துள்ளார். வாரிசு அரசை நான் ஒழிப்பேன் என்று பிரதமர் கூறுகிறார். அதன் அடிப்படையில், கருணாநிதியின் குடும்பத்தை பிரதமர் ஒழிக்க நினைக்கிறார். நாங்கள் வாரிசு என்பதால் அதிகாரத்தில் அமரவில்லை.

தியாகத்தின் காரணமாகவும், இயக்கத்தின் மீது வைத்திருந்த தூய்மையின் காரணமாகவுமே கருணாநிதி முதல்வர் பதவியில் அமர்ந்தார். அந்த வழியில், மு.க.ஸ்டாலின் 50 ஆண்டு காலம் செய்த தியாகத்தின் காரணமாகவே, தற்போது அவர் முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார்.

2 கோடி மக்களும் ஒரே நிலையில் இருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் முதல்வராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஸ்டாலின் குடும்பத்தையும், திமுகவையும் பிரதமர் அழிப்பேன் என்று கூறி வருகிறார். ஆனால், அதிமுகவை ஏன் பிஜேபியினர் எதுவுமே சொல்வதில்லை. ஏதேனும் உள்ளடி வேலை நடக்கிறதா? அதிமுக உங்களுக்கு (பாஜக) இஸ்டக்காரர்களா இல்லை கஷ்டக்காரர்களா?

திமுக பாஷானத்தில் புழுத்த புழு. வேறொரு பாஷானம் எங்களை அழிக்க முடியாது. சனாதனத்தைப் பற்றி அமைச்சர் உதயநிதி சரியாகத்தான் கூறியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஒரு நல்ல பகுத்தறிவாளர். இதனை கருணாநிதியே கூறியுள்ளார். இந்த நாட்டை திமுகவை தவிர எந்த கொம்பனாலும் ஆள முடியாது. அப்படி ஆண்டால், அது நாடாக இருக்காது. இந்த மண்ணுக்கு உரியவர்கள் நாங்கள்” என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: நாடளுமன்றத் தேர்தல் 2024; அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி!

Last Updated : Mar 6, 2024, 5:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.