ETV Bharat / state

'நிதி இன்னும் வரல'.. 32,000 -க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வருமா? - அமைச்சர் ஷாக் தகவல்! - TAMILNADU TEACHERS SALARY

மத்திய அரசின் நிதி வராததால் 32,298 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாகக் கூடிய நிலையில் உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2024, 4:55 PM IST

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் உள்ள அரசு பள்ளிகளில் இன்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்க்கொண்டார். அதனை தொடர்ந்து வாணியம்பாடியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது பேசியவர், தமிழக முதலமைச்சர் 2 முறையும், தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டெல்லி சென்று ஒன்றிய கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான நிதியை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம் என்றார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், இன்றைக்கு உரிய நேரத்தில் குறிப்பாக 4 தவணையாக வரவேண்டிய நிதி இதுவரையில் வரவில்லை. தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்தும் இதுவரை நிதி கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து, இன்றைக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அதை சார்ந்து இருக்கின்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர் என குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: சாம்சங் ஊழியர் போராட்டம்: சங்கத்திற்கு அங்கீகாரம் வேண்டி தொடரும் வேலைநிறுத்தம்! கைது நடவடிக்கைகள் எதற்கு?

தொடர்ந்து பேசிய அமைச்சர், ஒன்றிய அரசின் நிதி வராததால், 32,298 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்களுக்கான சம்பளங்கள் வழங்காததால், அவர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாகக்கூடிய நிலையில் உள்ளது.

முதல் தவணையாக கிட்டத்தட்ட 573 கோடி வழங்க வேண்டும். கடந்த ஆண்டு 4வது தவணையாக 249 கோடி பாக்கியாக வைத்துள்ளனர். இதில் நம்முடைய மாணவர்களின் எதிர்காலம் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது. இதனை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, தமிழக அரசு நிதியிலிருந்து எப்படி பங்கீட்டு சம்பளத்தை வழங்குவது குறித்து, ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

தமிழக அரசு ஆசிரியர் பெருமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும். அவர்களை தமிழக அரசு கைவிடாது. ஒவ்வொரு அமைச்சரும், கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழக முதல்வரின் உத்தரவை ஏற்று, ஒவ்வொரு தொகுதியாக சென்று 219 தொகுதியாக அதை நிறைவு செய்திருக்கிறோம். பாதிக்கப்படுவது எங்களது குடும்ப உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டத்தை மகிழ்ச்சியாக நிறைவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.