சென்னை: தமிழ்நாட்டில் 'நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி' (Namma School Namma Ooru Palli) திட்டத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட தனிநபர்களின் பங்களிப்புடன், ரூ.464 கோடி மதிப்பில் 17 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் பயன்பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நேற்று (நவ.20) நடைபெற்றது. அதில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளியின் உறுப்பினர் செயலாளர் சுதன், யுனிசெஃப் இந்தியாவின் கல்வித் தலைவரான சாதனா பாண்டே ஆகியோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக NSNOP திட்டத்தின் மூலம் கூட்டுரவுகளை ஏற்படுத்துவது குறித்து அனைவரும் கலந்துரையாடினர்.
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம்: இந்த திட்டம் கடந்த 2022 டிசம்பர் 19ஆம் தேதி முதலமைச்சரால் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வங்கிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (NGOs), தனிநபர்கள் மற்றும் அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காகப் பங்களிக்கலாம். இதுவரை 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட தனிநபர்களின் பங்களிப்புடன் ரூ.464 கோடி செலவில் 17,500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் பயன்பெறும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
The roundtable discussion on Partnerships to improve creativity in students held on 20th November 2024, highlighted the need for collective efforts from corporates, local communities, and government administration to drive transformative changes in the education landscape.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) November 20, 2024
I… pic.twitter.com/oTZWYZ9cDp
இதையும் படிங்க: சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!
இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல், உயர் கல்விக்கான உதவித்தொகை, கழிப்பறைகள் மற்றும் பிற சுகாதார வசதிகள், கூடுதல் வகுப்பறைகள், ஹைடெக் லேப்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டுதல் போன்ற முக்கிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. யூனிசெஃப், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு போன்ற திட்டத்தை பிற இந்திய மாநிலங்களிலும் அறிமுகப்படுத்துவதை பெரும் வாய்ப்பாக கருதுவதன் மூலம் நம்ம ஸ்கூல் நம்ம ஊருக்கான தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "இனி வரும் நிலையான மற்றும் அர்த்தமுள்ள கூட்டு முயற்சிகளின் நிகழ்வுகளுக்கு முன்னுதாரணமாக அமையட்டும். நம்ம ஸ்கூல் நம்ம ஊரு மாடலை பல மாநிலங்கள் மற்றும் உலகளவில் முக்கிய மாதிரியாக கட்டமைக்க, யூனிசெஃப்பின் அளவிட முடியாத பங்களிப்புக்கு நன்றி. உரையாடல்களை ஊக்குவிக்கவும், கூட்டு முயற்சிகளை வலுப்படுத்தவும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை விரிவுபடுத்தவும் ஒரு முக்கிய செயல்பாடாக விளங்குகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குழந்தைக்கும், தரமான கல்வி மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகள் உறுதி செய்யப்படுகின்றன" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்