ETV Bharat / state

கனிம நில வரிச் சட்டம்.. தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்! - MINING BILL

தமிழ்நாடு கனிமங்களைக் கொண்டுள்ள நில வரிச் சட்டம் என்ற சட்டத்தை இயற்றுவதற்கான சட்ட மசோதாவை சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிமுகம் செய்தார்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2024, 8:32 PM IST

சென்னை: கனிமப் பகுதி மேம்பாட்டு ஆணையம் தொடர்பான வழக்கில் கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருந்தது. அதில், 'கனிமவளம் கொண்ட நிலங்களும், அரசியல் சாசனத்தின் 7-ம் இணைப்புப் பட்டியலில் உள்ள நிலங்கள் என்ற பிரிவின்கீழ் வருகின்றன. எனவே சுரங்கங்கள், கற்சுரங்கங்கள் ஆகியவற்றை கொண்டுள்ள நிலங்களின் மீது வரி வசூலிப்பதற்காக சட்ட இயற்றுவதற்கு மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் மாநிலத்தின் வருவாயை அதிகரிப்பதற்காக, கனிம வளம் கொண்ட நிலங்கள் மீது வரி விதிப்பதற்கான சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதற்கேற்ற வகையில் இந்த சட்ட மசோதாவை அரசு அறிமுகம் செய்கிறது. இந்த சட்டப்படி, பழுப்புக்கரி, சுண்ணாம்புக்கல், உள்ளிட்ட 13 வகை கனிமங்களை பெரிய வகை கனிமங்களும், கரட்டுக்கல், சரளை மண், வண்ண மற்றும் கருப்பு கருங்கல், கூழாங்கல், மணல், படிகக் கல், உருட்டு களி மண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 வகை கனிமங்களை சிறிய வகை கனிமங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பெரிய கனிமங்களுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரி நிர்ணயிக்கப்படுகிறது. சிறு கனிமங்களுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரை வரி நிர்ணயிக்கப்படுகிறது. நிலத்தில் உள்ள கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கு முறையே ஒரு டன்னுக்கு ரூ.8,500 மற்றும் ஒரு கன மீட்டருக்கு ரூ.3.50 என வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அதற்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.), ஜி.கே.மணி (பா.ம.க.), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "புதுமண தம்பதிகள் தான் அப்படி செல்ல நினைப்பார்கள்" வானதி சீனிவாசன் கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்!

"பெரிய கனிமங்களுக்கு வரி விதிப்பது சரிதான். ஆனால் சிறிய வகை கனிம நிலங்களுக்கான வரி உயர்வினால் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துவிடும். இதனால் நடுத்தர, ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே கனிமங்களைக் கொண்டுள்ள நில வரிச் சட்டத்தை கொண்டு வருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று தெரிவித்தனர்.

அவர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசினார். அப்போது, "வரியை பெறுவதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. விற்பனை வரியில் சில மாறுபாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளுக்கு மாறுபாடு இல்லை. வரி விதிக்கும்போது அதுபற்றி பரிசீலனை செய்யப்படும்" என்று கூறினார். அதைத் தொடர்ந்து அந்த மசோதா, எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.