ETV Bharat / state

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு - Manjolai Tea estate workers - MANJOLAI TEA ESTATE WORKERS

Manjolai Tea estate workers: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தொட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அங்கிருந்து அவர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கைகளும் எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்
மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் (Credits - ETV Bharat Tamil nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 1:32 PM IST

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நாங்கள் இரண்டு தலைமுறைகளாக மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் வசித்து வருகிறோம். மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குத்தகை காலம் 2028 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

குத்தகை காலம் நிறைவடைந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் கீழ் இந்த நிலம் அரசிடம் வழங்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில் குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே BBTC நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு முன்பாக தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் இருந்து வெளியேற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்கூட்டியே தொழிலாளர்களை வெளியே அனுப்புவதால், தாமாக முன்வந்து ஓய்வு பெறுவோருக்கு 59 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 1.4 லட்சம் முதல் 2.80 லட்சம் வரை இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது.

ஆனால், 60 வயது எட்டியவர்களுக்கு எவ்விதமான தொகையும் வழங்கப்படவில்லை. இந்த தொகை வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருக்காது. சொந்த இடமோ, வீடோ இல்லாத நிலையில் மாஞ்சோலை தொழிலாளர்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளனர். பெரும்பாலானவர்கள் நான்கு தலைமுறைகளாக இதே பகுதியில் வசித்து வரும் சூழலில், தற்போது, அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளதால் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

ஆகவே மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு உதவிகளை அரசு செய்ய வேண்டும். நத்தம் புறம்போக்கு நிலங்களில் எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதோடு, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர முன் வர வேண்டும். ஆகஸ்ட் மாதம் முதல் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையில், அவர்களுக்கு கன்னியாகுமரி அரசு ரப்பர் தோட்ட கழகம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயப் பகுதிகள், அங்கன்வாடிகள் போன்றவற்றில் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுவரை அந்த மனு மீது எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. ஆகவே மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்த 700 குடும்பங்களுக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதோடு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரவும், கன்னியாகுமரி ரப்பர் தோட்ட கழகம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதி, அங்கன்வாடிகள், சத்துணவு ஒருங்கிணைப்பாளர் உதவியாளர் போன்ற ஏதேனும் ஒரு அரசு பணியை குடும்பத்தில் ஒருவருக்கு வழங்கவும், குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவசமாக வழங்கவும் உத்தரவிட வேண்டும். அவர்களுக்கு மறு பணி வாய்ப்பு வழங்கப்படும் வரை ஒரு குடும்பத்திற்கு மாதம் 10,000 வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "இலங்கை தமிழர்கள் பலருக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரப்பர் கழகத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு போன்றவற்றை செய்து தர வேண்டும்" என வாதிட்டார்.

அதற்கு அரசுத்தரப்பில், "BBTC ஒரு தனியார் நிறுவனம்" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், "மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அங்கிருந்து, அவர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது" என அறிவுறுத்தி, வழக்கு தொடர்பாக அரசுத்தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆட்கள் தேர்வு தனியாருக்கு விடப்படுவது ஏன்? - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.