ETV Bharat / state

இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட வழக்கிலிருந்து விலகினார் உயர் நீதிமன்ற நீதிபதி! - ILAYARAJA SONGS COPYRIGHT CASE

Ilayaraja songs copyright case: இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கிலிருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியன் விலகினார்.

இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட வழக்கில் இருந்து விலகினார் உயர் நீதிமன்ற நீதிபதி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 25, 2024, 8:21 PM IST

Updated : Mar 25, 2024, 10:52 PM IST

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி எக்கோ ரெக்கார்டிங் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கு இன்று (மார்.25) விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையிலிருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியன் விலகினார்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் படங்களின், 4500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பயன்படுத்த எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. இந்த ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல், தான் இசையமைத்த பாடல்களைப் பயன்படுத்தியதாகக் கூறி, எக்கோ நிறுவனம், அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்களுக்கு எதிராகப் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமந்த், தயாரிப்பாளர்களிடம் இருந்து உரிமை பெற்ற இந்த பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கும் உரிமை உள்ளது என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த நிலையில், படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், தயாரிப்பாளர்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களைப் பயன்படுத்த தங்களுக்கு அதிகாரம் இருப்பதாகவும் கூறி, பாடல்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என, எக்கோ நிறுவனத்தின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகுவதாக, நீதிபதி ஆர்.சுப்ரமணியன் தெரிவித்தார். மேலும், வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 2021 கிருஷ்ணகிரி சட்டசபை தேர்தல் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய கோரிய வழக்கில்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Krishnagiri Assembly Constituency

Last Updated : Mar 25, 2024, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.