சென்னை: போதைப்பொருள் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் திமுவை சேர்ந்தவர் என கூறிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மீது 1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், போதைப்பொருள் கடத்தியதாக காவல்துறையினரால் ஜாபர் சாதிக் டெல்லியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் திமுவை சேர்ந்தவர் என்றும், தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகவும் X தளத்தில் மார்ச் 8ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டார்.
அவரது கருத்து திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாகவும், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜாபர் சாதிக்கை தொடர்புப் படுத்திப் பேசத் தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவதூறான கருத்துக்களைப் பரப்பி வரும் எடப்பாடி பழனிச்சாமி 1 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு வரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர்தல் பத்திர விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம்!