ETV Bharat / state

தொடர் ஆய்வில் இறங்கிய பேரூராட்சி நிர்வாகம்: கடுப்பான வியாபாரிகள்.. முற்றுகையிடப்பட்ட பேரூராட்சி அலுவலகம்!

Plastic bag inspection at Theni: தேனியில் பிளாஸ்டிக் பைகள் சோதனை என்கின்ற பெயரில் பெட்டி கடைகள் முதல் பெரிய கடைகள் வரை 500 மற்றும் 1000 ரூபாய் என அபராதம் விதித்து வணிகர்களுக்கு இடையூறு செய்வதாகப் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலர்களிடம் வணிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Plastic usage argument
பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 9:43 PM IST

பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

தேனி: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பூதிப்புரம் பேரூராட்சி மஞ்சுநாயக்கன்பட்டி, வாழையாத்துப்பட்டி, ஆதிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய பேரூராட்சியாக இயங்கி வருகின்றது. இந்நிலையில் பூதிப்புரம் பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் மளிகைக் கடை உள்ளிட்ட பல்வேறு விற்பனைக் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகளிடம் பூதிப்புரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் பைகள் இருக்கின்றதா என்று தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் பூதிப்புரம் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் இன்று(பிப்.17) பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நிர்வாக அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த வணிகர் கூறுகையில், "பேரூராட்சி சார்பில் 10 நபர்கள் அடிக்கடி கடைகளுக்கு வந்து பிளாஸ்டிக் பைகள் சோதனை செய்கின்ற பெயரில் கடைகளில் உள்ள பொருட்களைச் சேதப்படுத்தி 10 நாட்களுக்கு ஒரு முறை அபராதம் விதிக்கின்றனர். தொடர்ந்து இவ்வாறு சோதனை மேற்கொள்வது எங்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றது" என்று குற்றம் சாட்டினார்.

அதைத்தொடர்ந்து, "சிறிய பெட்டிக்கடைகள் முதல் பெரிய கடைகள் வரை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரையில் தொடர்ந்து அபராதம் விதித்து எங்களுக்கு இடையூறு தருகின்றனர். பெரிய நிறுவனங்களிலிருந்து பெறப்படும் பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பைகளில் தான் வருகிறது. இதற்கு அரசு தான் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும்" எனப் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.