சென்னை: ஆவடி அருகே சென்னை - திருப்பதி இடையேயான நெடுஞ்சாலையில் வாலிபர் ஒருவர் கையில் கட்டையுடன், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வந்துள்ளார். அப்போது, அந்த வழியாகச் சென்ற காரை வழிமறித்த, காரை நகர விடாலம் கையில் வைத்திருந்த கட்டையால் காரை அடிப்பது போல் அச்சுறுத்தி உள்ளார்.
தொடர்ந்து அவ்வழியாகச் சென்ற வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, போக்குவரத்திற்கு இடையூறு செய்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் சென்ற குடும்பத்தினர் மீது அவ்வழியாகச் சென்ற மற்றொரு வாகனம் உருசியத்தில்,இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது.
இதில், இருசக்கர வாகனத்திலிருந்த குழந்தை கீழே விழுந்து, தலையில் அடிப்பட்டதில் மயக்கம் அடைந்து. இதனால், மிகுந்த பதற்றம் அடைந்த குழந்தையின் பெற்றோர் அவ்வழியாகச் சென்ற மற்றொரு காரில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், இந்த விபத்திற்குச் சாலையில் செல்வோரை அச்சுறுத்தி அவரும் வாலிபர் தான் காரணம் எனக் கூறி அப்பகுதி மக்கள் அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது, இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வாலிபரை மீட்டு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. அதன் பின்னர் அவரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த நபர் சாலையில் இடையூறு செய்யும் காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பூஜை போட வந்த கார் கோயிலுக்குள் புகுந்து விபத்து.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!