ETV Bharat / state

"தீர்மானம் போடுங்க.. வர்றத பாத்துக்கலாம்" - காஷ்மீர் விவகாரத்தில் வைகோ கொடுத்த ஐடியா! - VAIKO ON KASHMIR

காஷ்மீரை தனித்துவம் வாய்ந்த மாநிலமாக ஆக்கும் முயற்சியில் புரட்சி வெடிக்கும் என்றால் திமுக, மதிமுக ஒன்றாக இணைந்து, இந்திய அரசியலில் அந்த நிலையை உருவாக்குவோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ (கோப்புப்படம்)
வைகோ (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 5:39 PM IST

சென்னை: எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழ்நாட்டிற்கு என்னென்ன கேடு செய்ய முடியுமோ அதை ராஜ் பவனில் இருந்து கொண்டு ஆளுநர் ரவி செய்து கொண்டிருக்கிறார் என்றார். தொடர்ந்து பேசியவர், இதற்கு முன்னாள் இருந்த ஆளுநர் ஒவ்வொரு பகுதிக்கும் தேவையில்லாமல்போய் பார்வையிட்டு ஆய்வு செய்ததற்கு எதிர்த்து தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இப்போது, இருக்கக்கூடிய ஆளுநரும் இந்த மண்ணில் திராவிட இயக்க சூழலை முறியடிக்க படாதபாடு படுகிறார்கள். அவர்கள் எண்ணம் ஒருநாளும் வெற்றி பெற முடியாது என்றார்.

மேலும், காஷ்மீரை மூன்று துண்டுகளாக்கி தனித்தன்மை உரிமையை காவு கொடுத்து, மோடி அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டத்தின் அந்த பிரிவை நீக்குவதற்கு மசோதாவை கொண்டு வந்தது. இப்போது நடந்த தேர்தலில் ஒரு சில கட்சிகள் சேரவில்லையே தவிர, ஷேக் அப்துல்லா மற்றும் மெகபூபா தலைமையிலான கட்சி காங்கிரசுடன் உடன்பாடு கண்டு ஜம்மு காஷ்மீரை கைப்பற்றியது என கூறினார்.

இதையும் படிங்க: டாடாவையே கையில் வைத்திருந்த தமிழ்நாடு: டைட்டன் நிறுவனத்தின் கதை!

தொடர்ந்து பேசிய வைகோ, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தை காஷ்மீர் பூமி நிராகரிக்கிறது என்று சொல்லி சட்டமன்றத்தில் தீர்மானம் போட வேண்டும். அவர்கள் துணிந்து முடிவெடுத்து தீர்மானம் போட வேண்டும். புரட்சி உருவாகும் என்றால் அதை மனப்பூர்வமாக மனிதாபிமானத்தோடு அற வழியில் காஷ்மீரை தனித்துவம் வாய்ந்த மாநிலமாக ஆக்குவதற்கு திமுக, மதிமுக ஒன்றாக இணைந்து இந்திய அரசியலில் அந்த நிலையை உருவாக்குவோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து, காஷ்மீர் கைவிட்டு போய்விடுமோ என்ற நிலையிலேயே மீண்டும் அதை ஜனநாயக பாதைக்கு கொண்டு வந்து காஷ்மீர் மக்கள் நிரூபித்து இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியை திணிப்போம், சமஸ்கிருதத்தை திணிப்போம், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இனி இந்த நாட்டில் ஓட்டுரிமை கிடையாது, இனி தலைநகர் டெல்லியாக இருக்காது வாரணாசியாக தான் தேர்ந்தெடுக்கப்படும் என பாஜக தீர்மானித்துள்ளதாக வைகோ கூறினார்.

இந்திய கூட்டணியில் அனைத்து தலைவர்களும் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். அந்த வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் அந்த கூட்டணியை அழைத்து கொண்டு செல்கிறார். அவர் கரத்தை வலுப்படுத்தும் வகையில் தான் மதிமுக செயல்படும். இதை சொல்லி தான் கூட்டணியில் சேர்ந்தோம். திராவிட இயக்கத்திற்கு ஆபத்து வருகிறது, எங்களிடமும் பலம் வாய்ந்த தொண்டர்கள் இருக்கிறார்கள். எங்கள் பலத்தை எல்லாம் திமுகவின் பலத்தோடு ஒன்று சேர்த்து இந்துத்துவா சக்திகளை முறியடிப்பது என்று இந்த நாளில் உறுதி ஏற்கிறோம் என கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.