ETV Bharat / state

கோயில் வளாகத்தில் மாஜி கவுன்சிலர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.. சிகிச்சை பலனின்றி மரணம்.. உறவினர்கள் மறியல்! - set fire on man - SET FIRE ON MAN

மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடியில் மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி எறிந்த முன்னாள் கவுன்சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 1:24 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே விநாயகர்பாளையத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (42). இவர் அப்பகுதியில் முன்னாள் கவுன்சிலராகவும், பொறையார் ரோட்டரி சங்கத் தலைவராக இருந்து வந்துள்ளார். மேலும், வாடகை பாத்திர கடை நடத்தி வரும் இவர் ஜோதிடம் பார்க்கும் பணியும் செய்து வந்தாக கூறப்படுகிறது.

அருண்குமார் தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள பழமைமிக்க மாசிலாமணி நாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி, கடந்த 26ஆம் தேதி இரவு கோயில் நடை சாத்தப்படும் நேரத்தில் அருண்குமார் கோயில் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது, அங்கு திடீரென வந்த மர்ம நபர்கள் அருண் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், விபத்தில் 65 சதவீதம் தீக்காயமடைந்த அருண்குமார் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையில், அருண்குமார் அளித்த தகவலின் பேரில், தரங்கம்பாடியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். ராஜ்குமார் இடத்தில் அருண்குமார் கடை நடத்தி வந்த நிலையில், இடத்தை காலி செய்வது தொடர்பாக இருவருக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாக அருண்குமார் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ராஜ்குமார் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கருதி, அவரை கைது செய்த போலீசார் விசாரணையில் முகாந்திரம் எதுவும் இல்லாததால் ராஜ்குமாரை பொறையார் போலீசார் விடுவித்தனர். இது குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 8:30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அருண்குமார் உயிரிழந்தார். தொடர்ந்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் உறவினர்கள் இடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து குற்றவாளிகளைக் கைது செய்ய கோரி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தைக்குப்பின் போராட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து விநாயகர்பாளையத்தில் வைக்கப்பட்டு இருந்த அருண்குமார் உடலுக்கு உறவினர்கள், குடும்பத்தார்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அருண்குமார் உடல் மயானத்திற்குக் கொண்டு சென்று எரியூட்டப்பட்டது.

இதையும் படிங்க: “இந்த வழக்கை கரூரில் யார் செய்யச் சொன்னார்கள் என தெரியும்”.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பு பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.