ETV Bharat / state

வாக்குப்பதிவின்போது உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க மன்சூர் அலிகான் வலியுறுத்தல்! - lok sabha election 2024

Mansoor Ali Khan: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு தேர்தல் ஆணையம் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் கோரிக்கை வைத்துள்ளார்.

Mansoor Ali Khan
Mansoor Ali Khan
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 3:01 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக நடித்து வருபவர், நடிகர் மன்சூர் அலிகான். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ படத்தில் நடித்து ரசிக்கப்பட்டவர். இவர் நடிப்பு தவிர்த்து, அரசியல் களத்திலும் பரபரப்பாக இயங்கி வருகிறார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார்.

இதற்காக வேலூர் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வந்தார். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். தொடர்ந்து, நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, வாக்குச்சாவடிகளுக்குச் சென்று ஆய்வு செய்தவர், வாக்கு இயந்திரப் பெட்டி இருட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தனது சின்னம் தெரியவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இந்நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வெயிலின் காரணமாக பல்வேறு இடங்களில் வாக்களிக்க வந்த 4 பேர் (ஒருவர் தேர்தல் பணி தன்னார்வலர்) உயிரிழந்துள்ளது தொடர்பாக தற்போது மன்சூர் அலிகான் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு பொதுமக்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். இதற்கு தேர்தல் ஆணையமும், இந்திய அரசும் தான் முழுக் காரணம். லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து விளம்பரங்கள் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவு என வீணாக விளம்பரம் செய்துள்ளது, தேர்தல் ஆணையம். நான் வேலூரில் 180 பூத்களுக்கு மேல் சென்றேன். வெளியில் வாக்களிக்க வருபவர்களுக்கு தேர்தல் ஆணையம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

இதனால் உயிரிழந்த நான்கு பேர் குடும்பத்திற்கும் தேர்தல் ஆணையம் முழுப் பொறுப்பேற்று, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு உடனடியாக வழங்க வேண்டும். அவசரகால இழப்பீடாக இதனை வழங்க வேண்டும். இனி வரும் தேர்தலில் இதுபோன்று நடைபெறக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தேர்தலின் போது திமுக பிரமுகரை தாக்கிய போலீசார் - கோவையில் நடந்தது என்ன? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.