ETV Bharat / state

கூலித்தொழிலாளர்களை குறி வைக்கும் காட்டன் சூதாட்டம்.. வேலூரில் ஆட்டோ ஓட்டுநரை ஏமாற்றிய நபர் கைது! - Cotton gambling Arrest - COTTON GAMBLING ARREST

Vellore Cotton gambling Arrest Issue: வேலூரில் காட்டன் சூதாட்டம் மூலம் ஆட்டோ ஓட்டுநரிடம் பணத்தை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் அனுப்பப்பட்டுள்ளார். தற்போது இவர் மீது கொலை முயற்சி வழக்குகள் உட்பட 19 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையம் மற்றும் காட்டன் சூதாட்டம் நடத்திய நபர் புகைப்படம்
காவல் நிலையம் மற்றும் காட்டன் சூதாட்டம் நடத்திய நபர் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 3:17 PM IST

வேலூர்: தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் (Cotton Gambling) வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. காட்டன் சூதாட்டம் என்பது, உதாரணமாக, 1 ரூபாய் கட்டினால் 70 ரூபாய் தரப்படும் என்றும், 70 ரூபாய் கட்டினால் 700 ரூபாய் வழங்கப்படும் என கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்து, கூலி வேலைக்குச் செல்லும் மக்களை லாட்டரி வலையில் விழ வைத்து, அதன் மூலம் லட்சக்கணக்கில் சிலர் பணம் சம்பாதிப்பதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேலூர் அடுத்த லத்தேரி காமராஜ்புரம் பகுதியில் காட்டன் சூதாட்டம் நடத்திய வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, இதுபோல நூற்றுக்கணக்கான முகவர்கள் இருப்பதாகவும், அதன் மூலம் பல கோடி ரூபாய் புரளுவதாகவும், இதைத் தடுக்க வேண்டிய மாவட்ட காவல் நிர்வாகம், இடைத்தரகர்களை மட்டும் கைது செய்துவிட்டு சூதாட்டம் நடத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கமல் தயக்கம் காட்டுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

தற்போது வேலூர் அடுத்த சின்ன அல்லாபுரம் பனந்தோப்பு பகுதியில் காட்டன் சூதாட்டம் அதிகளவு நடைபெறுவதாகவும், இந்த சூதாட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு சூதாட்டத்தில் பணத்தை இழந்து வருகின்றனர் எனவும், அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தை, அதே பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவர் தொடர்ந்து நடத்தி வருவதாகவும், தன்னிடம் பணம் கட்டினால் ஒன்றுக்கு நூறு மடங்காக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றி வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

இந்த நிலையில், ராஜேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநர் தான் காட்டன் சூதாட்டம் நடத்தும் சேட்டு என்பவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "சேட்டு என்பவர் ஆசை வார்த்தைகளைக் கூறி தன்னிடம் தினமும் பணம் பெற்றுக்கொண்டு, மறுநாள் உனக்கு பரிசு விழவில்லை என்றும், தினமும் பணம் கட்டினால் தான் பரிசு விழும் என்று கூறி ஏமாற்றிவிட்டார்" என பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் சேட்டு என்ற நபரை கைது செய்த போலீசார், காட்டன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்படும் நம்பர் எழுதிய சீட்டு மற்றும் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சேட்டு என்பவர் பல நாட்களாக காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இவர் மீது ஏற்கனவே 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 19 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சேட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.