ETV Bharat / state

மருமகனை கொல்ல கூலிப் படை அனுப்பிய மாமனார்.. உயிருக்கு போராடும் இளைஞர்.. காதல் திருமண பின்னணி..! - tiruvannamalai murder attempt - TIRUVANNAMALAI MURDER ATTEMPT

tiruvannamalai crime: திருவண்ணாமலை அருகே மகளை காதலித்து திருமணம் செய்துகொண்ட பெட்ரோல் பங்க் ஊழியரை கொலை செய்ய முயன்ற தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலை முயற்சி நடந்த பெட்ரோல் பங்க்
கொலை முயற்சி நடந்த பெட்ரோல் பங்க் (Credit - Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 5:51 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில் விஜய் (வயது 25) மற்றும் அரவிந்த் சாமி (வயது 23) வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு இருவரும் பெட்ரோல் பங்க் அலுவலகத்துக்குள் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் விஜய் மற்றும் அரவிந்த் சாமியை சரமாரியாக அறிவாளால் வெட்டியுள்ளனர். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக செங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த செங்கம் போலீசார் இருவரையும் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இருவருக்கும் முகம் மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தால் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செங்கம் போலீசார் பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெட்டுப்பட்டவர்களில் விஜய் என்ற இளைஞர் செங்கம் டவுன் வஉசி தெருவைச் சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் என்பது தெரிந்தது. இவர் செங்கம் பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், விஜய் சென்னசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், பெண்ணின் தந்தை ஜானகிராமன் செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அப்போது, ஜெயஸ்ரீ தனது கணவருடன் செல்வதாக காவல் நிலையத்தில் கூறி விட்டு இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த ஜெயஸ்ரீயின் தந்தை, விஜய்யை தீர்த்துக் கட்ட முடிவு செய்து ஆட்களை அனுப்பியது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து பெண்ணின் தந்தை ஜானகிராமன் மற்றும் அவரது மகன் ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த செங்கம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நெல்லை சாதி மறுப்பு திருமணம் விவகாரம்: "கூலிப்படையை ஏவ முயற்சி" - சிபிஐ(எம்) நிர்வாகி கனகராஜ் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.