ETV Bharat / state

சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்.. மதுரை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு! - Savukku Shankar - SAVUKKU SHANKAR

Savukku Shankar case: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு மற்றும் கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு, மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்துள்ளது.

நீதிமன்றம் மற்றும் சவுக்கு சங்கர் புகைப்படம்
நீதிமன்றம் மற்றும் சவுக்கு சங்கர் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 7:38 PM IST

மதுரை: பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், கடந்த மே 4ஆம் தேதி தேனி மாவட்டத்தில், கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட போது கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கில், சவுக்கு சங்கர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இது தொடர்பான விசாரணைக்காக, கோவையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, இதன் விசாரணை நீதிபதி செங்கமலச்செல்வன் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது, கோவை சிறையில் 10 காவலர்கள் தன்னை தாக்கியதாகவும், கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை எனவும் கூறி, தன்னை மதுரை சிறைக்கு மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து, மே 22ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, சவுக்கு சங்கர் கோவை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனிடையே, சவுக்கு சங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது சவுக்கு சங்கருக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் நீதிமன்ற வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீது குவியும் வழக்குகள்: பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்து தொடர்பாக மேலும் ஒரு வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.