ETV Bharat / state

"நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய ஈடிவி பாரத் ஊடகத்திற்கு நன்றி" - பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை நெகிழ்ச்சி! - பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு வீடு

Padma Shri Chinnapillai: பத்மஸ்ரீ விருது பெற்ற மதுரை சின்னப்பிள்ளை, வீடின்றி தவிப்பதை ஈடிவி பாரத் நேற்று செய்தி வெளியிட்ட நிலையில், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளதற்கு, ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சின்னப்பிள்ளை நன்றி கூறியுள்ளார்.

Padma Shri Chinnapillai
பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 3:06 PM IST

Updated : Mar 9, 2024, 3:39 PM IST

பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை

மதுரை: 'தன்னுடைய நீண்டநாள் கோரிக்கையை ஊடகத்தின் வாயிலாக வெளிக்கொண்டு வந்ததால் தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு வீடு ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் அழகர்கோவில் செல்லும் சாலையில், அப்பன்திருப்பதிக்கு அருகே அமைந்துள்ளது பில்லுசேரி எனும் சிறிய கிராமம். இந்தப் பகுதி மக்களின் வேளாண் பணிகளில் கொத்து தலைவியாகச் செயல்பட்டு, களஞ்சியம் சுயஉதவிக்குழுக்களின் வாயிலாக அடித்தட்டு ஏழை மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர், பெ.சின்னப்பிள்ளை.

இதன் காரணமாக கடந்த 2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அன்றைய பிரதமர் வாஜ்பாயி கையால் ஸ்த்ரீ சக்தி புரஸ்கார் எனும் விருதைப் பெற்றதுடன், வாஜ்பாயே மகிழ்ந்து சின்னப்பிளையின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அதனையடுத்து, அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி பொற்கிழி விருதும், 2018-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி கையால் ஔவையார் விருதும், 2019-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.

இந்நிலையில் தனக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கப்பட்ட நிலையில், இதுவரை வீடு கட்டித் தரப்படவில்லை என்றும், இதனால் மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது என்றும் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு நேர்காணல் அளித்திருந்தார். இதனையடுத்து நாம், “எப்படி இருக்கிறார் சின்னப்பிள்ளை?” என்ற தலைப்பின் கீழ், மகளிர் தினத்தன்று இந்த செய்தியை வெளியிட்டு இருந்தோம்.

இதையும் படிங்க: எப்படி இருக்கிறார் சின்னப்பிள்ளை? சாதனை தமிழச்சியின் இன்றைய நிலை என்ன?

இதன் எதிரொலியாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடடினயாக 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் மதுரை-அழகர்கோவில் முதன்மை சாலையில் அப்பன்திருப்பதி அருகேயுள்ள திருவிழான்பட்டி என்ற ஊரில், 1 சென்ட் 380 சதுர அடி நிலத்தை ஒதுக்கீடு செய்து, இந்த மாதமே கட்டுமானப் பணிகள் அனைத்தும் நடைபெறும் எனவும் அறிவிப்பு செய்திருந்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மதுரை கிழக்கு வட்டாட்சியர் பழனிக்குமார், இன்று சின்னப்பிள்ளையை பில்லுசேரியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து வீடு ஒதுக்கீட்டிற்கான பட்டாவை வழங்கினார். மேலும், தற்போது நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதியில், ஜேசிபி இயந்திரம் கொண்டு சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

இது குறித்து பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை கூறுகையில், “எனக்கு என்று சொந்த வீடு எதுவும் கிடையாது. தற்போது என்னுடைய மூத்த மகன் சின்னதம்பிக்குச் சொந்தமான வீட்டில்தான் வசித்து வருகிறேன். மிகவும் சிரமமான சூழலில் வீடு ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த செய்தியை முதன்முதலில் கொண்டு சென்ற ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்"என்றார்.

இதையும் படிங்க: "நோயாளிகள் பணம் படைக்கும் இயந்திரம் இல்லை" - தனியார் மருத்துவமனைகளை விளாசிய திவ்யா சத்யராஜ்.. பின்னணி என்ன?

Last Updated : Mar 9, 2024, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.