ETV Bharat / state

மீண்டும் 90's-க்கு அழைத்துச் செல்லும் பல்லாங்குழி, நொண்டி உள்ளிட்ட போட்டிகள் - மதுரை அரசு அருங்காட்சியகம் அசத்தல் ஏற்பாடு! - Traditional Games in Madurai - TRADITIONAL GAMES IN MADURAI

International Museum Day: வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்கேற்கும் பல்லாங்குழி, நொண்டி, தட்டாங்கல், தாயம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை மே 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடத்த உள்ளதாக மதுரை அரசு அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

மதுரை அரசு அருங்காட்சியகம் புகைப்படம்
மதுரை அரசு அருங்காட்சியகம் புகைப்படம் (Credit to ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 9:41 AM IST

மதுரை: தமிழ்நாடு அரசு அருங்காட்சியகங்கள் துறையின் கீழ் இயங்கும் மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், வரும் மே 18ஆம் தேதி உலக அருங்காட்சியகங்கள் தினத்தை முன்னிட்டு, தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் தொடர்பான போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மீ.மருதுபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்கேற்கும் பல்லாங்குழி, நொண்டி, தட்டாங்கல், தாயம் உள்ளிட்ட போட்டிகள் அனைத்தும் மே 11ஆம் தேதி துவங்கி 16ஆம் தேதி வரை மதுரை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது.

போட்டியின் விவரம்:

  • மே 11 - பல்லாங்குழி
  • மே 12 - தட்டாங்கல்
  • மே 13 - தாயம்
  • மே 14 - நொண்டி
  • மே 15 - கிட்டிபுல்
  • மே 16 - கோலிக்குண்டு ஆகிய போட்டிகள் நடைபெறும்.

ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்குத் துவங்கும் இப்போட்டிகள், பிற்பகல் 1 மணிக்கு நிறைவடையும். மேலும், போட்டியில் பங்கு பெற விரும்புவோர் தங்களது பெயர்களை 97900 33307 என்ற செல்பேசி எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். இப்போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. ஆனால், போட்டிக்கான விதிமுறைகள் போட்டி நடைபெறும் நாளன்று வழங்கப்படும்.

இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் அருங்காட்சியக விதிமுறைகளுக்கு உட்பட்டு பெரியவர்கள் ரூ.5, சிறியவர்கள் ரூ.3, வெளிநாட்டவர்கள் எனில் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, இப்போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா? அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.