மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைth திருவிழா இந்த மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் இன்று (ஏப்ரல் 8) விழா கோலாகமாகத் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழாவையொட்டி, ஆயிரம் பொன் சப்பரத்தில் வைக்கப்படும் யாழி முகத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு, கொட்டகை அமைக்க முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு இன்று வேதமந்திரங்கள், மங்கல வாத்தியங்கள் முழங்க நடைபெற்றது. தொடர்ந்து, வண்டியூர் தேனூர் மண்டபத்திலும் இதே போன்று முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
கொட்டகை முகூர்த்தத்துடன் திருவிழா துவங்கிய நிலையில், மீனாட்சி அம்மன் திருக்கோவில் சித்திரைத்திருவிழா வாஸ்து சாந்தியுடன் வரும் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 19ஆம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகமும், 20ஆம் தேதி திக்கு விஜயம், 21ஆம் தேதி திருக்கல்யாணமும், 22ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
இதே போல் வருகின்ற 22ஆம் தேதி மதுரை தல்லாகுளத்தில் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவையும், விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 23ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யூடியூபில் சப்ஸ்கிரைபர்ஸ் அதிகரிக்க நூதன திட்டம் - வினாத் தாள்களை கசிய விட்ட ஆசிரியர் கைது! - Odisha Question Paper Leak