திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் கடந்த 2018- 2019 மற்றும் 2019 -2020 நிதி ஆண்டுகளில், உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காலத்தில், பேரூராட்சியின் தனி அலுவலர் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டது. அப்போது பேரூராட்சியில் பணியாற்றிய தனி அலுவலர், உதவி பொறியாளர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக சில அலுவலர்கள் சேர்ந்து திட்ட பணிகளை செய்யாமல் சுமார் 1 கோடியே 60 லட்சம் கையாடல் செய்துள்ளனர்.
இதில் மூலதன மானிய நிதி மற்றும் நகர்ப்புற சாலைகள் கட்டமைப்பு ஆகிய திட்டத்தின் கீழ் அரசிடம் இருந்து நிதிகளை பெற்று, பேரூராட்சிகளில் சாலை போடுவதற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலைகளை ஐந்து வருடத்திற்கு ஒப்பந்ததாரர்கள் பராமரிப்பு செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டால், வேறு ஒரு திட்டத்தின் கீழ் மேலும் புதிய ஒப்பந்த முறையில் புதிய சாலை போடுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அதிலும் புதிய சாலை அமைக்காமல், வேறு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை ஒப்பந்ததாரர்கள் உடன் இணைந்து அரசு அலுவலர்கள் முறைகேடு செய்துள்ளனர். இதே போன்று வெவ்வேறு திட்டத்தின் கீழ் புதிய சாலைகளை போடுவதற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது .ஆனால் புதிய சாலை அமைக்கப்படவில்லை.
எனவே வள்ளியூர் பேரூராட்சியில் புதிய தார் சாலை அமைப்பதற்கு அரசு அதிகாரிகளே 1 கோடியே 60 லட்ச ரூபாய் முறுக்கேடு செய்துள்ளதை லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 7) நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வெவ்வேறு திட்டத்தின் கீழ் ஒரே பகுதிகளில் புதிய தார் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கியது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தவுவிட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது.. போலீசார் நூல் பிடித்தது எப்படி? காங்கிரஸ் தலைமை நடவடிக்கை என்ன?