ETV Bharat / state

நயினார் நகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு நாளை விசாரணை! - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

NAINAR NAGENDRAN: திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் மற்றும் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய மனுவை நாளை (ஏப்ரல் 18) விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 1:49 PM IST

சென்னை: திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அதில், தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பிடிப்பட்டது. தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறையிடம் மனு அளித்ததாக கூறியுள்ளார்.

ஆனால், அந்த மனு மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார். மேலும், வாக்களர்களுக்கு அளிப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்துள்ளதாகவும் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் இம்மானுவேல் முறையிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி கங்கபூர்வாலா அமர்வு வழக்கை நாளை (ஏப்ரல் 18) விசாரிப்பதாக தெரிவித்தது.

இதையும் படிங்க: பாஜகவினர் அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது: கடம்பூர் ராஜூ - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.