சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை, ஒப்புகைச் சீட்டு இயந்திரம் எனும் விவிபேட் (VVPAT) இயந்திரத்தில் விழும் சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதை கட்டாயமாக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி கமிலஸ் செல்வா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது” எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் கூட வாக்களிக்கலாம்! எப்படி தெரியுமா? - Lok Sabha Election 2024