ETV Bharat / state

வடலூர் சுத்த சன்மார்க்க அறக்கட்டளை மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை! - vadalur vallalar sabai case - VADALUR VALLALAR SABAI CASE

Madras High court: வடலூர் சுத்த சன்மார்க்க நிலைய அறக்கட்டளை மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் புகைப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 3:56 PM IST

சென்னை: அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, வடலூர் சுத்த சன்மார்க்க நிலைய அறக்கட்டளைக்கு எதிராக சேப்ளாநத்தம் கிராம பஞ்சாயத்து தலைவர் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள சுத்த சன்மார்க்க நிலையம் என்ற அறக்கட்டளை சார்பில், அதன் செயலாளர் செல்வராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் கொள்கைகளை பயிற்றுவிக்கும் நோக்கில், 73 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட அறக்கட்டளை சார்பில், ஆரவற்றோர் இல்லங்கள், இலவசப் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளை சார்பில் குருகுலம் மற்றும் சேவாஷ்ரமம் துவங்குவதற்கு 1951ஆம் ஆண்டு அரசு நிலம் ஒதுக்கியது. கூடுதல் நிலம் தேவைப்பட்டதால், அருகில் இருந்த அரசு நிலமும் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிலத்தின் பட்டா மாற்றம் செய்யப்படாததால் நிலத்தை தரிசு நிலம் எனக் கூறி, ஆக்கிரமிப்புக்களை அகற்றும்படி சேப்ளாநத்தம் கிராம பஞ்சாயத்து தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்யக் கோரியும், வருவாய்த்துறை ஆவணங்களில் மாற்றம் செய்யக் கோரியும் அளித்த விண்ணப்பம் மீது முடிவெடுக்கப்பட உள்ள நிலையில், பஞ்சாயத்து தலைவர் உள்நோக்கத்துடன் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும், பட்டா கோரிய தனது விண்ணப்பம் மீது முடிவெடுக்கும் வரை, இந்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்’ எனவும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி.டி.ஆஷா மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், பஞ்சாயத்து தலைவர் நடவடிக்கைக்கு தடை விதித்தும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: தொழில் முனைவோர் ஆக ஒரு வாய்ப்பு! 100% உதவித்தொகையுடன் மதுரையில் பயிற்சி..மிஸ் பண்ணிடாதீங்க..! - TN Govt Entrepreneurship Training

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.