ETV Bharat / state

கொலை வழக்கில் விடுதலையான திமுக முன்னாள் எம்எல்ஏ; மேல்முறையீட்டுக்கு பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவு! - DMK EX MLA Ranganathan case

DMK EX MLA Ranganathan case: கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் உள்ளிட்ட 12 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 3:29 PM IST

சென்னை: சென்னையில் உள்ள கொளத்தூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான புவனேஸ்வரன் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2012 ஜனவரி 10ஆம் தேதி மர்ம நபர்களால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணையை நடத்திய சிபிஐ காவல்துறையினர், திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், சையது இப்ராகிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம், பாலசந்திரன் உள்பட 12 பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் உள்ளிட்ட 12 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து கொலை செய்யப்பட்ட புவனேஸ்வரனின் சகோதரர் மகேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனு குறித்து சிபிஐ மற்றும் முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: நெல்லை சாதி மறுப்பு திருமணம்; போலீஸ் பாதுகாப்பு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு! - TIRUNELVELI INTER CASTE MARRIAGE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.