ETV Bharat / state

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்களுக்கு செக் வைத்த நீதிமன்றம்! - NAINAR NAGENDRAN CASE

Nayanar Nagendran Rs.4 crore issue: தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர்கள் மூன்று பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் புகைப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் புகைப்படம் (Credits: ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 3:46 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர்கள் மூன்று பேர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், சம்மனுக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து 4 கோடி ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வந்ததை அடுத்து, அப்பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பணத்தை பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில், திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரனின் ஆட்கள் 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாயைக் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டல் ஊழியர்கள் எஸ்.சதீஷ், எஸ்.நவீன், எஸ்.பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது, இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயம், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். மேலும், ஹோட்டல் ஊழியர்கள் எஸ்.சதீஷ், எஸ்.நவீன், எஸ்.பெருமாள் ஆகிய மூன்று பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க காவல்துறை சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை எதிர்த்து ஊழியர்கள் மூன்று பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில் சம்மன் மற்றும் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதார்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்பன்ட் தினேஷ், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் விதிமுறைகளுக்கு புறம்பாக சம்மன் வழங்கப்பட்டிருப்பதாகவும், எனவே சம்மனுக்கு தடை விதித்து வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

பின்னர், சிபிசிஐடி போலீசார் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார், உரிய சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் மனுதாரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், சம்மனுக்கு தடை விதிக்கப்பட்டால் விசாரணை பாதிக்கப்படும் எனவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, தற்போதைய நிலையில் வழக்கின் விசாரணைக்கு தடை விதிப்பது அல்லது சம்மனை ரத்து செய்தால் அது வழக்கு விசாரணையை பாதிக்கும். எனவே, தற்போதய நிலையில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தார். மேலும், மனுதாரர்கள் சம்மனுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் குண்டர் சட்டம் வழக்கு; தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.