ETV Bharat / state

”பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது” - உயர் நீதிமன்றம் உத்தரவு! - Vinayagar Chaturthi 2024 - VINAYAGAR CHATURTHI 2024

Madras High Court: பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை வைக்க அனுமதிக்கக் கூடாது என்றும், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் மக்கக்கூடிய வகையிலான சிலைகளுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சிலை மற்றும் கோப்புப்படம்
விநாயகர் சிலை மற்றும் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 3:42 PM IST

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை கிராமத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி, ஆர்கே பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார் ஆஜராகி, மூன்று அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் அனுமதி கேட்பதால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால் மனு பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

அனுமதி கேட்கும் போது பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி கேட்க முடியாது என்றும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அமைக்கப்பட உள்ள சிலைகளுக்கு மட்டுமே அனுமதி கேட்க முடியும் என சுட்டிக் காட்டினார். ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை வைக்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை வைக்க அனுமதிக்கக் கூடாது என்றும், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் மக்கக்கூடிய வகையிலான சிலைகளுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : சேலம் ராமர் பாதம் கோயில் விவகாரம்: தாசில்தார் உத்தரவுக்கு இடைக்காலத் தடை - Salem Ramar temple

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.