ETV Bharat / state

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு; பொள்ளச்சி ஜெயராமன் ஆஜராக உத்தரவு! - Udhayanidhi Stalin Defamation case - UDHAYANIDHI STALIN DEFAMATION CASE

Udhayanidhi Stalin Defamation Case: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்த மான நஷ்ட ஈடு வழக்கின் குறுக்கு விசாரணைக்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப் படம்
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 10:06 PM IST

சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய திமுக இளைஞர் அணி செயலாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புப்படுத்தி பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் தன் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி, சமுதாயத்தில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகக் கூறி, அவருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு இன்று (ஆகஸ்ட் 30) விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இது தொடர்பான வழக்கில் குறுக்கு விசாரணை நடத்த ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் 3 நாட்கள் அனுமதி வழங்கியதாகவும், ஆனால் அந்த நாட்களில் விசாரணை நடத்த இயலவில்லை என தெரிவித்தார்.

எனவே, மீண்டும் பொள்ளாச்சி ஜெயராமனை மாஸ்டர் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து, செப்டம்பர் 10ஆம் தேதி குறுக்கு விசாரணைக்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பொள்ளாச்சி ஜெயராமனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: அன்றே கணித்த உதயநிதி ஸ்டாலின்.. மாரி செல்வராஜ் சொன்ன சுவாரஸ்யம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.