ETV Bharat / state

“வேண்டியவர்களுக்கு புறவாசல்.. வாக்களித்தவர்களுக்கு துரோகம்” - புதுச்சேரி அரசை கடிந்த உயர் நீதிமன்றம்! - illegal appointment issue

புதுச்சேரி அரசுக்கு நியாயமான தேர்வை நடத்த முடியாதா? வேண்டியவர்களுக்கு புறவாசல் பணி நியமனம் அளித்து, வாக்களித்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்? என புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2024, 4:15 PM IST

சென்னை: புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் புறவாசல் வழியாக சட்டவிரோதமாக பணி நியமனங்கள் நடைபெறுகிறது என்றும், தற்காலிகமாக பணியாளர்களை நியமித்து பின் அவர்களை பணி நிரந்தரம் செய்கின்றனர் என புதுச்சேரியைச் சேர்ந்த அய்யாசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “வேண்டப்பட்டவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்குவது என்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. வேலை வாய்ப்பு அலுவலகம் அல்லது போட்டித் தேர்வு மூலம் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் பணி நியமனங்கள் நடைபெற வேண்டும். இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை மீறி புறவாசல் நியமனங்கள் நடைபெறுகிறது. 52 துறைகளில் இது போல நியமனங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தங்களுக்கு கருணை அடிப்படையில் கிடைக்க வேண்டிய வேலை பறிக்கப்படுவதாகக் கூறி கோபி, கண்ணன் உள்ளிட்ட 10 பேர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தனர் .

இதையும் படிங்க: TNPSC தொடர்பான வழக்கில் இருந்து திடீரென விலகிய நீதிபதி, வழக்குரைஞர்! காரணம் என்ன?

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சட்டவிரோத நியமனங்களை நியாயப்படுத்த ஏன் புதுச்சேரி அரசு போராடுகிறது என கேள்வி எழுப்பினார். முறையான அறிவிப்பு வெளியிட்டு, விதிகளுக்கு உட்பட்டு தேர்வு நடத்தி, தகுதியின் அடிப்படையில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றி பணி நியமனங்கள் வழங்க வேண்டும். வேண்டப்பட்டவர்களுக்கு புறவாசல் பணி நியமனம் கொடுத்து, தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்? அவர்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்? என கண்டனம் தெரிவித்தார்.

அனைத்து பணி நியமனங்களுக்கும், அனைத்து தரப்பினருக்கும் சம வாய்ப்பு கொடுக்க வேண்டும். 16 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி அரசுக்கு நியாயமான தேர்வை நடத்த முடியாதா? என கேள்வி எழுப்பினார். சட்டவிரோதமாக பணிநியமனங்கள் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், இதுகுறித்து புதுச்சேரி அரசு உரிய பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.