ETV Bharat / state

ஷரியத் கவுன்சில் நீதிமன்றம் அல்ல! முத்தலாக் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய தீர்ப்பு - LEGALITY OF SHARIAT COURT

நீதிமன்றங்களில் விவாகரத்து பெறுவதற்கு முன் தலாக் வழங்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஷரியத் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது.

Madurai Bench of Madras High Court
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2024, 2:47 PM IST

மதுரை: திருநெல்வேலியை சேர்ந்த முஸ்லிம் மருத்துவர் தம்பதிக்கு, இஸ்லாமிய முறைப்படி கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இந்த திருமணம் மூலமாக ஒரு மகன் இருக்கும் நிலையில், 2018ம் ஆண்டு 2005ம் ஆண்டு திருமண குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் (Protection of Women from Domestic Violence Act of 2005) அந்த பெண் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி (Judicial Magistrate) 2021 ம் ஆண்டு ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன்படி குடும்ப வன்முறையால் ஏற்பட்ட மனக்காயத்திற்காக அவரது கணவர் 5 லட்ச ரூபாய் இழப்பீடும் ஜீவனாம்சம் மற்றும் பராமரிப்பு தொகையாக மாதம் 25 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இதே தீர்ப்பை 2022ம் ஆண்டு செஷன்ஸ் கோர்ட்டு (Sessions Court) உறுதி செய்தது, இதனால் அந்த பெண்ணின் கணவர் கிரிமினல் சட்ட மறு ஆய்வு கேட்டு (Criminal Revision Petition) உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே 2017ம் ஆண்டு ஆகஸ்ட் , செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் 3 முறை தலாக் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், இதனை ஏற்றுக் கொண்டு ஷரியத் கவுன்சில் விவகாரத்து சான்றிதழ் வழங்கியதாகவும், இதன் பேரில் 2வது திருமணம் செய்ததாகவும் ஆவணங்கள் கணவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டன.

கணவரின் குற்றவியல் மறுஆய்வு மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் பிறப்பித்த தீர்ப்பில், முதல் மனைவிக்கு விவாகரத்து வழங்காமல் இரண்டாவது திருமணம் செய்ததால், குடும்ப வன்முறை சட்டத்தின் படி முதல் மனைவி ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது என குறிப்பிட்டார். ஒரு இஸ்லாமிய ஆண் சட்ட விதிகளுக்கு உட்படாமல் 4 திருமணங்கள் வரை செய்ய அவர்களது மார்க்கம் அனுமதிக்கிறது. மனைவி நினைத்தாலும் அதை தடுக்க முடியாது என நீதிபதி குறிப்பிட்டார்.

மார்க்கம் அனுமதித்தாலும், சட்டப்பூர்வ விவகாரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்வதை சட்டம் அனுமதிக்கவில்லை என கூறிய நீதிபதி, அதனால் முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் கேட்க முழு உரிமை உள்ளது. முதல் இரு தலாக் நோட்டீஸ் வழங்கப்பட்டது. 3-வது நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. அதனால் தனது திருமணம் தற்போது செல்லும் என மனைவி கூறுவதை நிராகரிக்க முடியாது எனவும் நீதிபதி கூறினார்.

விவாகரத்தை தீர்மானிக்கும் நீதிபதியாக கணவரை கருத முடியாது? சட்டரீதியாக நீதிமன்றத்தின் மூலமாக மட்டுமே விவாகரத்து பெற முடியும் எனவும் கூறிய நீதிபதிகள், நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத வரை இருவரும் கணவன் மனைவியாகவே கருதப்படுவார்கள். சட்டம் அனுமதிக்கின்ற வகையில் தலாக் சொன்னதாக நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும். மனைவி அதை மறுத்தால் மட்டுமே நீதிமன்றத்தை அணுக முடியும் எனவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் கூறினார்.

"ஒரு இந்து/பார்சி/யூத கணவர் முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்வது திருமண உறவை மீறும் குற்றம் (Bigamy) என குறிப்பிட்ட நீதிபதி, இதனை குடும்ப வன்முறையாகவும் கருதி மனைவிக்கு இழப்பீடு கொடுக்க முடியும் என குறிப்பிட்டார். இதே சட்டம் முஸ்லிம் தம்பதிக்கும் பொருந்தும் எனவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் தமது தீர்ப்பில் எழுதியருக்கிறார்.

ஒரு முஸ்லீம் ஆண் 4 திருமணம் வரையிலும் செய்வதற்கு சுதந்திரம் இருக்கிறது , இதனை தடுப்பதற்கு மனைவிக்கு சட்ப்பூர்வ வழிகள் இல்லை என்றாலும், தனக்கு பராமரிப்புக்கான தொகையை கேட்கவும் திருமண பந்தத்தற்கு உட்பட்ட வீட்டு வேலைகளை செய்யாமல் இருக்கவும் மனைவிக்கு உரிமை இருப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். குறிப்பிட்ட வழக்கில் 3வது தலாக் வழங்கப்பட்டதற்கான எந்த ஆதாரங்களையும் கணவர் வழங்கவில்லை எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

நவம்பர் 29ம் தேதி 2017ம் ஆண்டு தமிழ்நாடு தவ்ஹத் ஜமா அத்தின் ஷரியத் கவுன்சில் விவாகரத்து சான்று வழங்கியிருப்பது குறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதி, இதில் பதில் மனுதாரரான மனைவி ஒத்துழைக்கவில்லை என குறிப்பிட்டிருப்பது குறித்தும் அதிர்ச்சி தெரிவித்தார். அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றங்கள் மட்டுமே விவாகரத்து வழங்க முடியும் என குறிப்பிட்ட நீதிபதிகள் ஷரியத் கவுன்சில் என்பது தனியார் அமைப்பே தவிர நீதிமன்றம் அல்ல எனவும் கூறினர்.

ஷரியத் கவுன்சில் அறிக்கையில், மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவர் பதிலளிக்காததால் இரு சாட்சிகளின் அடிப்படையில் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளதாக எழுதியுள்ளதை குறிப்பிட்ட நீதிபதி, மகன் தலாக் சொன்னதற்கு தந்தையே சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது தமிழ் பழமொழியான "வேலிக்கு ஓணான் சாட்சி, வெந்ததுக்கு சொக்கன் சாட்சி" என்பதை போல உள்ளது எனவும் தமது கருத்தை பதிவு செய்தார்.

இதையும் படிங்க:

பதிவுத் தபால் மூலமாக முத்தலாக் கூறினாலும், அது செல்லாது - ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

'முத்தலாக்' பாணியில் இன்ஸ்டாவில் விவகாரத்து அறிவித்த துபாய் இளவரசி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.