ETV Bharat / state

நீர்நிலைகளில் விபத்து மரணங்களை தடுப்பது தொடர்பாக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்! - Tourist Places Drowning Death Issue

Madras High Court: தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் உள்ள நீர்நிலைகளில் விபத்து மரணங்களைத் தடுக்கும் வகையில், எச்சரிக்கை பலகைகள் மற்றும் அவசர கட்டுப்பாட்டு மையங்கள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court
Madras High Court
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 9:56 PM IST

சென்னை: தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள், கோயில் குளங்கள், அருவிகள் மற்றும் கடல் போன்ற நீர்நிலைப் பகுதிகளில் மூழ்கி மரணங்கள் ஏற்படுவதைத் தடுக்க, 24 மணி நேரமும் பணியில் இருக்கும் நீச்சலில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும். நீர் நிலைகளில் ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

மேலும், கடல் சீற்றமான பகுதிகளான சென்னை திருவொற்றியூர் முதல் கிழக்கு கடற்கரை மகாபலிபுரம் வரை தடுப்புகளை அமைக்க வேண்டும் என்றும், ராமேஸ்வரத்தில் புனித தீர்த்தத்தில் நீராடும்போது பக்தர்கள் உயிரிழந்ததையும் குறிப்பிட்டு, சென்னையைச் சேர்ந்த கோட்டீஸ்வரி என்பவர், கடந்த 2018-அம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 18 தீர்த்த கிணறுகளுக்குள் பக்தர்கள் இறங்கி நீராட அனுமதி இல்லை எனவும், தீர்த்தத்தை தெளிப்பதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாது, கோயில் திருவிழா காலங்களில் மீட்புப்படை, கண்காணிப்பு கோபுரம் ஆகியவை மூலம் கண்காணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கைகளை, ஆண்டு முழுவதும் பின்பற்றும் வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், ராமேஸ்வரத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை, மற்ற கடற்கரை கோயில்களிலும் பின்பற்றிச் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், மீட்புப் பணிக்கு கடலோர காவல்படையை பணியமர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், ஆறு, குளம், ஏரி மற்றும் கடல் போன்ற அனைத்து விதமான நீர்நிலைகளிலும் ஏற்படும் விபத்து மற்றும் மரணங்களைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் எனவும், எச்சரிக்கை பலகைகள் மற்றும் அவசர கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியவற்றை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, கோட்டீஸ்வரி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான மூவருக்கு பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.