கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பல்வேறு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகாவாச்சாரி ஆஜராகி, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரய விற்பனை காவல்துறைக்கு தெரிந்தே நடந்துள்ளதாகவும், தங்களது பணியை செய்யாத போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
கர்நாடகா, பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு கள்ளச்சாராயம் வருவதாகவும், எனவே இது தொடர்பாக சிபிஐ-யால் மட்டுமே விசாரிக்க முடியும் எனவும், சிபிசிஐடி விசாரணை நடத்தினால் தவறு செய்தவர்கள் தப்பிவிடுவார்கள் என குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்கப்படுவதாக வெறும் குற்றச்சாட்டு மட்டுமே சொல்லப்பட்ட அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனால், கள்ளக்குறிச்சியில் தவறு நடந்ததற்கு ஆதாரமாக 73 பேரின் மரணங்கள் உள்ள நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தவறு? எனவும் கேள்வி எழுப்பினார்.
வாதங்கள் நிறைவடையாததை அடுத்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 10ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : "பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்று கொண்டால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி": ஆளுநர் ரவி திட்டவட்டம்! - rn ravi