ETV Bharat / state

நகைக்கடை, சோப் விளம்பரம் தொடர்பான தமன்னா தொடர்ந்த வழக்கு அடுத்தடுத்து ஒத்திவைப்பு! - Tamannaah ad case - TAMANNAAH AD CASE

Tamannaah: தனியார் கோல்டு மற்றும் சோப் விளம்பரம் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் அந்நிறுவனம் தான் நடித்த விளம்பரத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என நடிகை தமன்னா தொடர்ந்த வழக்கு விசாரணையை செப்.2 மற்றும் செப்.12 ஆகிய தேதிகளில் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம், தமன்னா
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமன்னா (Credits - ETV Bharat Tamil Nadu and Tamannaah X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 4:12 PM IST

சென்னை: பிரபல தனியார் நகைக்கடை நிறுவனத்திற்கு விளம்பர மாடலாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இந்நிலையில், ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் தனது விளம்பரத்தை அந்நிறுவனம் பயன்படுத்தி வருவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஒப்பந்த காலம் முடிந்து விட்டதால், தனியார் நகைக்கடை நிறுவனம் தமன்னாவின் விளம்பரங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில், நீதிமன்ற தடை உத்தரவிற்குப் பிறகும், தனது விளம்பரத்தை தனியார் நகைக்கடை நிறுவனம் பயன்படுத்துவதாகக் கூறி, தமன்னா சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நகைக்கடை நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணகுமார், தங்கள் நிறுவன தரப்பில் மனுதாரரின் விளம்பரத்தை நிறுத்தி விட்டதாகவும், ஆனால் சமூக ஊடகங்களில் பழைய விளம்பரங்களை தனிநபர் பயன்படுத்துவதற்கு நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்தார். இதையடுத்து மனுவிற்கு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

அதேபோல், தனியார் துணி சோப் நிறுவனத்திற்கு மாடலாக பயன்படுத்திய விளம்பர ஒப்பந்தத்தை மீறி தமது விளம்பரங்களை அந்த நிறுவனம் பயன்படுத்துவதாகவும், எனவே இதற்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கூறி தமன்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தமன்னா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமன்னா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. எதிர்மனுதாரரான நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து, வழக்கை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு கருத்தை பதிவு செய்தவரின் முன்ஜாமீன் தள்ளுபடி! - Madras High Court

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.