ETV Bharat / state

மருத்துவப் பணி கலந்தாய்வில் யாரிடமும் சிபாரிசுக்கு செல்லக்கூடாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 7:38 PM IST

Minister Ma Subramanian: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடக்கவிருக்கும் கூட்டரங்கில், தேர்வு செய்யப்பட்ட 1,021 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா சுப்பிரமணியன்
அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டடம், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி இளநிலை மற்றும் முதுகலைப் பட்டம் பயிலும் மாணவியர்களுக்கான தங்கும் விடுதி கட்டிடத்திற்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (பிப்.01) அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிலும் முதுகலை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு கட்டப்படும் புதிய விடுதி 2,53,546 சதுர அடி பரப்பளவில் தரைத்தளத்துடன் கூடிய 14 தளங்களில் பார்வையாளர்கள் அறை, மருத்துவர் அறை, வார்டன் அறை, சமையலறை போன்ற பல்வேறு வசதிகளுடன் 464 அறைகள் என ரூ.132.24 கோடி செலவில் கட்டப்படவிருக்கிறது.

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு தங்கும் விடுதி ரூ.64.90 கோடி மதிப்பீட்டில் 1,50,136 சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 13 தளங்களுடன் 274 தங்கும் அறைகள் கொண்ட முதுகலை மற்றும் இளநிலை பல் மருத்துவ மாணவியர்களுக்கான தங்கும் விடுதி கட்டிடத்திற்கு கட்டப்பட உள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மருத்துவர் பணி நியமனத்தில், 30க்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்குகள் எல்லாம் முடிவுற்று, 1,021 மருத்துவப் பணியிடங்கள் நிரப்புவதற்கு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புகள் முடிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட உள்ளபோது, கோவிட் காலங்களில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு தகுதி (Merit) மதிப்பெண்கள் தரப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை வந்திருந்தது. கோவிட் காலங்களில் பணிபுரிந்தவர்களுக்கு 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கி, அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்றுடன் முடிவடைந்தது.

தற்போது 1,021 மருத்துவர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதில் 1,021 மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் மூலம் தனித்தனியாக அனுப்பப்பட இருக்கிறது. வருகிற 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்களில் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

இந்திய வரலாற்றில் தொடக்க காலப் பணி நியமனத்தில் கலந்தாய்வு என்பதே கிடையாது. முதல் முறையாக அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்களுடைய காலிப் பணியிடங்கள் 2 ஆயிரத்துக்கு மேல் இருக்கின்ற காரணத்தினால், இந்த 1,021 மருத்துவர்களும், அவர்களுடைய விருப்பப்பட்ட இடங்களுக்குச் சென்றுவிட்டால், அதிகப்படியான காலிப் பணியிடங்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படும். அந்த காலிப் பணியிடங்கள் காலியாகவே இருக்கும்.

எனவே, மருத்துவ சேவையில் இடர்பாடு ஏற்படும் என்கின்ற காரணத்தினால், அதனைத் தவிர்க்கும் வகையில் அறந்தாங்கி, அரியலூர், செய்யாறு, திண்டுக்கல், கோவில்பட்டி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பரமக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, சிவகாசி, தென்காசி, தஞ்சாவூர், நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருவாரூர், விருதுநகர் ஆகிய 20 சுகாதார மாவட்டங்களில் காலிப்பணியிடம் காண்பிக்கப்பட உள்ளது.

இதைத் தவிர்த்து, இடைத்தரகரிடம் போய் எனக்கு அங்கே வாங்கித் தாருங்கள், உங்களுக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியுமே, அவர் மூலம் எனக்கு பரிந்துரைத்து, எனக்கு பக்கத்தில் வாங்கித் தாருங்கள் என்கின்ற முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது என்பதற்காகவே வெளிப்படையாகவே இந்த 20 இடங்களை அறிவித்து இருக்கிறோம்.

இந்த கலந்தாய்வில் 1,021 பேரும் பங்கேற்க வேண்டும். பிப்ரவரி 6ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக கூட்டரங்கில் இந்த 1,021 மருத்துவர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்க இருக்கிறோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: “சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க அதிகாரம் இல்லை”.. தமிழக அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.