தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சுவாமிமலையில் இருந்து, ஆந்திர மாநிலம் வடபள்ளி கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு புதிதாக 10 ஐம்பொன் சிலைகள் செய்யப்பட்டு, இன்று காலை வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சிலைகளை, அணைக்கரை சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாததால், சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு, திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த சிலைகள் தொடர்பாக திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், இந்த சிலைகளை தேர்தல் பறக்கும் படையினர் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐம்பொன் சிலைகள் பிடிபட்ட சம்பவம் மற்றும் விடுவிக்கப்பட்ட சம்பவம் திருவிடைமருதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 6 முறை எம்பியாக இருந்த பழனிமாணிக்கத்திற்கு சீட் மறுக்கப்பட்டது ஏன்? யார் இந்த முரசொலி?