ETV Bharat / state

தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2024; 54 வேட்பாளர்கள் களம் கண்டுள்ள கரூரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? - TN lok sabha election Result 2024 - TN LOK SABHA ELECTION RESULT 2024

Lok Sabha Election Results 2024 Live Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் குறித்த தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது ஈடிவி பாரத்.

கரூர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் புகைப்படம்
கரூர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் புகைப்படம் (GFX Credit -ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 7:36 PM IST

Updated : Jun 3, 2024, 6:43 PM IST

கரூர்: திருச்சி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கடந்த 1996 -ம் ஆண்டிலிருந்து தனி மாவட்டமாக செயல்பட்டுவரும் கரூர், உயர்தர கைத்தறி தொழிலுக்கு பெயர் போனது. மேலும் பேருந்து கட்டுமான தொழில், ஆடை உற்பத்தி, கொசு வலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முதல் இடம் வகிக்கிறது.

தொகுதிகள்: கரூர் நாடாளுமன்ற தொகுதியானது கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது.

2024 தேர்தலில் பதிவான வாக்குகள்: கரூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14,29,790 வாக்காளர்கள் உள்ள நிலையில், ஆண்கள் 6,93,730 வாக்காளர்களும், பெண்கள் 7,35,970 வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 90 வாக்காளர்களும் உள்ள நிலையில், 11,25,241 வாக்குகள் (78.70%) பதிவாகி உள்ளன.

அபார வெற்றி பெற்ற ஜோதிமணி: 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது, கரூர் தொகுதியில் 6,78,373 ஆண் வாக்காளர்கள் 7,08,196 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 67 பேர் என மொத்தம் 13,86,636 வாக்காளர்கள் இருந்தனர்.

இவர்களில் 11,03,165 வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், (81.5%) காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 6,95,697 வாக்குகள் பெற்றதுடன் 4,20,546 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றார். அதிமுக வேட்பாளர் 2,75,151 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி 38,453 வாக்குகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட தங்கவேல் 31,139 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஹரிஹரன் 15,967 வாக்குகள் பெற்றார்.

35 ஆண்டுகளுக்கு பிறகு: கடந்த 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட தேர்வு செய்யப்படாத நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

களத்தில் உள்ள 54 வேட்பாளர்கள்: தமிழகத்தில் அதிகபட்சமாக இத்தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். பாஜக சார்பில் வி.வி.செந்தில்நாதன், காங்கிரஸ் சார்பில் எஸ்.ஜோதிமணி, அதிமுக சார்பில் தங்கவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கருப்பையா உள்ளிட்ட 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதன் காரணமாக ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கு தலா நான்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம் 1,670 வாக்குச் சாவடி மையங்களுக்கு 7,666 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கரூருக்கு படையெடுத்த பாஜக தலைவர்கள்: பாஜக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வானதி சீனிவாசன், நடிகர் சரத்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் ஏற்கெனவே அதிமுகவில் இரண்டு முறை அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அனுபவம் பெற்றவர்; இளம் வயதில் அதிமுகவில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். பின்னர் பாஜகவில் இணைந்து கரூர் மாவட்ட தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். குறிப்பாக, பெண்களிடம் காலில் விழுந்து ஆசி கேட்டு வாக்கு சேகரித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களுக்கு ஆற்றிய பணியைவிட, அவர் தேசிய அரசியலில் ஆற்றிய பணியே அதிகம். அவர் வெற்றி பெற்றால் மீண்டும் தேசிய அரசியலுக்கே சென்று விடுவார் என்று தான் பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் எடுத்துக் கூறி, வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க முயன்றார் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன்.

பிரச்சாரத்தில் நட்சத்திரங்கள்: அதிமுகவில் எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் என்ற அடையாளத்துடன் கரூர் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டுள்ளார் தங்கவேல். இவருக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சின்னசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம், அதிமுக பேச்சாளர்கள் நடிகர் ரவிவர்மா, நடிகைகள் விந்தியா, கௌதமி, பாத்திமா பாபு உள்ளிட்டவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரச்சாரத்தில் மாட்டுவண்டி ஓட்டியும் தாரை தப்பட்டை அடித்தும் நூதன முறையில் தங்கவேல் வாக்கு சேகரித்தார்.

ஜோதிமணியின் நுணுக்கமான பிரச்சாரம்: பாஜக மற்றும் அதிமுக வேட்பாளருக்கு கடும் போட்டியாக திமுக கூட்டணி சார்பில் களம் மீண்டும் கரூரில் களமிறங்கி உள்ளார் ஜோதிமணி. கடந்த முறை திமுக கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியின் தேர்தல் களப்பணியால் வெற்றி பெற்ற ஜோதிமணி, இம்முறை மீண்டும் வெற்றிக்கனியைப் பறிக்கும் நோக்கில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாஜகவுக்கு வாக்களிப்பதும், அதிமுகவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் என்று அனைத்துத் தரப்ப வாக்காளர்கள் மத்தியிலும் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்த தோதிமணி, கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த எம்.பியாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் தான் ஆற்றிய பணிகளையும் தேர்தல் பிரச்சாரத்தில் எடுத்துரைத்தார்.

இவருக்கு ஆதரவாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஜோதிமணிக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு வேண்டுகோள்விடுத்தார்.

திருச்சி சிவா உள்ளிட்ட திமுகவின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் சக்கரபாணி, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரும் ஜோதிமணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பிரச்சாரத்துக்கு வராத சீமான்: கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில் ஒருவர், நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் கருப்பையா. ஆனால், இவர் தொகுதியில் பெரிதாக பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. இவருக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதர கட்சிகள்: சங்கரன்(பகுஜன் சமாஜ் கட்சி), முருகேசன்(இந்திய கணசங்கம் கட்சி), சண்முகம் (சாமானிய மக்கள் நல கட்சி), வின்சென்ட் (ஆன்டி கரப்ஷன் டைனமிக் பார்ட்டி) மற்றும் 46 சுயேச்சைகள் உள்ளிட்ட மொத்தம் 54 வேட்பாளர்கள் கரூரில் களம் கண்டுள்ளனர்.

வெற்றி வாய்ப்பு யாருக்கு?: 54 வேட்பாளர்களை கண்டுள்ள கரூர் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி யாருக்கு என்பது ஜுன் 4-இல் தெரிய வரும்.

இதையும் படிங்க: தேர்தல் 2024: மத்திய சென்னையை தக்கவைக்குமா திமுக? வெற்றி யார் பக்கம்? - LOK SABHA ELECTION RESULT 2024

Last Updated : Jun 3, 2024, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.