ETV Bharat / state

திருப்பத்தூர் கார் செட்டில் சிறுத்தை... சிக்கிய ஐந்து பேரின் நிலை என்ன? - Leopard in Tirupathur School - LEOPARD IN TIRUPATHUR SCHOOL

Leopard in Tirupathur Private School: திருப்பத்தூரில் தனியார் பள்ளியில் சிறுத்தை நுழைந்த நிலையில், அதனைப் பிடிக்க வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.

தனியார் பள்ளி லளாகத்தில் புகுந்த சிறுத்தை
தனியார் பள்ளி லளாகத்தில் புகுந்த சிறுத்தை (Image Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 5:31 PM IST

Updated : Jun 14, 2024, 9:44 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சாமநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், சிறுத்தையைத் தேடியுள்ளனர். அப்போது வீட்டிலிருந்து சிறுத்தை, அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் தாவியுள்ளது.

தனியார் பள்ளி லளாகத்தில் புகுந்த சிறுத்தை (Video Credits - ETV Bharat Tamilnadu)

அப்போது அங்கிருந்த வாட்ச்மேன் கோபால் என்பவரின் தலையில் சிறுத்தை தாக்கியுள்ளது. பின்னர், அங்கிருந்தவர்கள் அவரை
மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதன்பின், பள்ளியில் இருந்த சிறுத்தை அருகே உள்ள கார்செட்டில் தாவியுள்ளது. இதனிடையே, பள்ளிகளில் இருந்த மாணவர்கள் போலீசாரின் நடவடிக்கையால் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனிடையே, சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்துவதற்காக ஓசூரில் இருந்து வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு, மேலும் 20 வனத்துறை அதிகாரிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சிறுத்தை பதுங்கி உள்ள கார் செட்டில் தீனா, பாஸ்கர், ஆஸ்கர், வாட்ச்மேன் ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட 5 நபர்கள் சிக்கிக்கொண்டு தவித்து வருகின்றனர். இவ்வாறு கார் செட்டில் சிக்கிய நபர்களிடம் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து வீடியோ மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் கால் மூலம் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: தடுப்புச்சுவரைத் தாண்டி வீட்டுக்குள் குதித்த சிறுத்தை.. நாயை கவ்விக் கொண்டு ஓடும் பரபரப்பு காட்சி!

Last Updated : Jun 14, 2024, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.