ETV Bharat / state

“எனக்கு பேச சொல்லிக் கொடுத்தது என் ஆசான் கருணாநிதி” - குஷ்பூவின் முழு விளக்கம் என்ன?

Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத்தொகை குறித்த குஷ்பூ கருத்துக்கு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றும் வரும் நிலையில், தவறான விஷயங்களை பரப்புவதே திமுகவின் டிஎன்ஏ என குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Magalir Urimai Thogai
Magalir Urimai Thogai
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 7:06 PM IST

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தேசிய மகளிர் ஆணைய தலைவர் குஷ்பூ, மகளிர் உரிமைத்தொகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார். இதனைக் கண்டித்து, தேனி மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு, குஷ்பூவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் குஷ்பூவை கண்டித்து திமுக மகளிர் அணியினர் குஷ்பூவின் படத்தை காலணிகளால் தாக்கியதோடு படத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இந்நிலையில், நடிகை குஷ்பூ தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "திமுகவில் இருந்து எல்லோரும் இன்று என்னைப் பற்றிப் பேசி வருகிறார்கள். நான் பேசிய பழைய ட்விட் வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

நான் பேசும் போது ஐடி விங்க், வார் ரூம் வைத்து பேசுவதில்லை. நேருக்கு நேர் பேசும் தைரியம் எனக்கு இருக்கிறது. குஷ்பு பேசுனா அவ்வளவு பயமா? ஏனென்றால் குஷ்பு உண்மையைப் பேசுவாள். தைரியமாகப் பேசுவாள். நான் பேசியதற்கு தவறாக அர்த்தம் எடுத்துகிட்டு ,அதை மட்டும் மக்கள் மத்தியில் போடுகிறதுக்கும், மக்களைத் திசை திருப்புவதும் உங்களுடைய வேலை. நீங்கள் எந்தெந்த வகையில் மக்களை ஏமாற்றுகிறீர்கள், ஏமாற்றி வருவீர்கள், ஏமாற்றி இருக்கிறீர்கள், அது உங்களுக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.

டாஸ்மாக் விவகாரம்: டாஸ்மாக் குறைப்பீர்களா, மாட்டீர்களா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் குறைப்போம் என முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சொன்னார்கள். திமுக நிர்வாகியிடமிருந்து ரூ.2,000 கோடி மதிப்பில் 3,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.

நான் பேசிய பழைய வீடியோக்களை எடுத்து போடுகிறதுதான் உங்களுடைய டிஎன்ஏ. இப்ப இருக்கிற பிரச்னைகளை பேசுவதற்கு உங்களிடம் எதும் இல்லை. மக்களுக்கு என்ன செய்தீர்களோ அதைச் சொல்லுங்கள். அது சொல்ல உங்களுக்கு தைரியம் இல்லை. உங்களுக்கு தைரியம் இருக்கவும் இருக்காது. ஏனென்றால், திமுக பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அந்த தைரியம் உங்களுக்கும் இல்லை, உங்கள் தலைவனுக்கும் இல்லை.

திமுக டிஎன்ஏ: தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு நீங்கள் ரூ.1,000 கொடுப்பதற்குப் பதிலாக, டாஸ்மாக் கடைகளைக் குறைத்தால் பெண்கள் பல ஆயிரம் சேமித்து குடும்பத்தை நல்லபடியாக, சந்தோஷமாக நடத்த முடியும் என்றுதான் நான் சொன்னேன். இதை திசை திருப்பிட்டு, பெண்களைக் கேவலப்படுத்தும் படி நான் பேசுகிறேன் எனச் சொல்கிறீர்கள். தப்பான ஒரு விஷயத்தை பரப்புவது திமுகவின் டிஎன்ஏ.

நான் திமுகவில் இருக்கும்போது பார்த்து இருக்கிறேன். திமுகவை விட்டு வெளியே வரும் போது பார்த்து இருக்கிறேன். எனக்கு இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் காட்டாதீர்கள். நான் தவறு பண்ணால் சின்ன குழந்தையாக இருந்தாலும் கீழே விழுந்து மன்னிப்பு கேட்பேன்.

நான் பயந்து ஓட மாட்டேன். அரசியல் நாகரிகம், மேடை நாகரிகம், தைரியமாக பேசக்கூடிய விஷயங்களை முன் வைத்து எனக்கு பேச சொல்லிக் கொடுத்தது என் ஆசான் கருணாநிதி. அதை நீங்கள் மறந்து விட்டீர்கள். ஆனால், நான் மறக்கவில்லை. மறக்கவும் மாட்டேன்.

ஒருவேளை நான் தப்பாக பேசினேன் என நினைத்தால் அதை நீங்கள் என்னிடம் சுட்டிக் காட்டாதீர்கள். எங்கே சுட்டி காட்டனுமோ அங்கே சுட்டிக் காட்டுங்கள். ஆனால் சொல்லிக் கொடுத்த விஷயங்களை மறக்க மாட்டேன். மாதா, பிதா, குரு, தெய்வம்தான் சொல்வார்கள். குரு என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.

குருவை அவமானப்படுத்தும் படியும், கேவலப்படுத்தும்படி என்றைக்கும் பேச மாட்டேன். அது எனக்குத் தெரியாது. இப்ப இருக்கிற காலகட்டத்தில் எல்லோருக்கும் ஆமா சொல்லிட்டு போகக்கூடியது ரொம்ப கஷ்டம். அதற்குப் பதிலாக, நீங்கள் மத்திய அரசிடம் இருந்து இவ்வளவு பணம் வந்தது, அதை வைத்துதான் நாங்கள் இவ்வளவு நல்லது பண்ணோம்.

பிரதமர் மோடி இவ்வளவு விஷயங்கள் எங்களுக்கு பண்ணிக் கொடுத்தார்கள். அதனால்தான் நல்ல திட்டங்களை மக்களுக்கு சேர்த்து இருக்கிறோம், மக்களிடம் கொண்டு போயிருக்கிறோம் எனச் சொல்லுங்கள். ஆனால். அதைச் சொல்ல மாட்டீர்கள். ஏனென்றால், அதை சொல்ல தைரியம் வேண்டும். தைரியம் உங்களுடைய லிஸ்டில் இல்லை.

திமுகவும், தைரியமும்: கல் தூக்கி வீசுவீர்கள், புடவை பிடித்து இழுப்பீர்கள், பெண்களைக் கேவலமாக பேசுவீர்கள், பெண்களை கீழ்த்தனமாக நடத்துவீர்கள் என எல்லாமே பண்ணுவீர்கள். ஆனால், பெண்களை ஒரு சமுதாயத்திற்குக் கொண்டு சேர்த்து அழகு பார்க்கிற எண்ணம் திமுகவிற்கு கிடையாது. என் மக்களுக்குத் தெரியும், நான் பெண்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறேன் என மக்களுக்குத் தெரியும்” என்று அந்த வீடியோவில் பேசினார்.

இதையும் படிங்க: நாளை வெளியாகிறதா திமுக வேட்பாளர் பட்டியல்? - அமைச்சர் துறைமுருகன் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.