மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் கர்நாடக உணவுத்துறை அமைச்சர் கே.எச்.முனியப்பா இன்று (திங்கட்கிழமை) குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக, கோயிலுக்கு வருகை தந்த அமைச்சர் முனியப்பாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து. காங்கிரஸ் தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் முனியப்பா கூறுகையில், "தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி (India alliance) வெற்றி பெறும். தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கூட்டணி கட்சித்தலைவர்கள் ஆதரவுடன் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்திய அரசியலில் இளம் தலைவராக ராகுல்காந்தி உள்ளார். மக்கள் ராகுல்காந்தியை தான் விரும்புகிறார்கள். காவிரி விவகாரத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இதில், தமிழகமும், கர்நாடகமும் சகோதர்களாக உள்ளனர். எனவே, எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அது தீர்க்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, அமைச்சருடன் வந்தவர்கள் தொலைப்பேசியுடன் கோயிலுக்குள் சென்றதால் காவலர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, கர்நாடக அமைச்சருடன் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர்த்து கூடுதலாக வந்த வாகனங்களின் பதிவெண்களை போலீசார் குறித்து வைத்தத்து குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்.. 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி! - Nursing Students Food Poison Issue