ETV Bharat / state

பாமக காஞ்சிபுரம் வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் அறிவிப்பு! - Kanchipuram PMK Jothi Venkatesan - KANCHIPURAM PMK JOTHI VENKATESAN

Kanchipuram PMK candidate: பாட்டாளி மக்கள் கட்சியின் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் வெ.ஜோதி வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

pmk-founder-ramadoss-announce-kancheepuram-candidate-jothi-venkatesan
பாமக காஞ்சிபுரம் வேட்பாளராக வெ.ஜோதி வெங்கடேசன் அறிவிப்பு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 9:11 PM IST

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாமக நிறுவனர் இராமதாசு இன்று காலை அறிவித்தார்.

மேலும், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது காஞ்சிபுரம் (தனி) தொகுதி வேட்பாளர் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2024 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட காஞ்சிபுரம் (தனி) தொகுதி வேட்பாளராக வெ.ஜோதி வெங்கடேசன் அறிவிக்கப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி! வேட்பாளரை மாற்றியது பா.ம.க. - SOWMYA ANBUMANI PMK

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.