ETV Bharat / state

இரட்டை பட்டம்.. ஸ்டார்ட் அப் ஐடியாக்கள்.. 20 எலெக்டிவ் கோர்ஸ்.. சென்னை ஐஐடியின் புதிய பாடத்திட்டம்! - IIT MADRAS New Syllabus

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 31, 2024, 10:07 PM IST

IIT Madras: சென்னை ஐஐடியில் மாற்றப்பட்ட பாடத்திட்டத்தை உலக அளவில் உள்ள பாடத்திட்டங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் உலகத் தரத்தில் பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.

IIT
சென்னை ஐஐடி (Credits - IIT Madras Website)

சென்னை: இது தொடர்பாக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "இன்றைய காலகட்டத்தில் ஒரு பாடப்பிரிவில் இருந்து மட்டுமே ஒரு பொருளை உருவாக்க முடியாது. ஐந்து அல்லது ஆறு பாடப்பிரிவில் பயின்றவர்கள் இணைந்து தான் ஒரு பொருளை உருவாக்க முடியும்.

சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

12ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வரும் மாணவர்கள் அறிவியல், கணக்கு போன்றவற்றை படித்திருந்தாலும், அவர் எதை படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யாமலே இருக்கின்றனர். மாணவர்களுக்கு சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் என ஒரு பாடப்பிரிவினை அளித்து விடுகிறோம்.

இந்த நிலையில், ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பயிலும் மாணவர்கள் 60 சதவீதம் அந்த பாடத்தின் அடிப்படையை படித்து விட்டு, 40 சதவீதம் எந்த பாடத்தை வேண்டுமானாலும் விரும்பி படிக்கலாம் என கூறியுள்ளோம். அப்படி 40 சதவீதம் விரும்பிய பாடத்தை படிக்கலாம் எனக் கூறிய பின்னர், தங்களுக்கு விருப்பப்பட்ட பாடப்பிரிவு கிடைக்கவில்லை என ஏங்கவில்லை. அதன்படி, ஆர்வம் உள்ள மாணவர்கள் இரட்டை பட்டத்தை தேர்வு செய்து தாங்கள் விரும்பிய பட்டத்தை பெற்றுச் சென்றுள்ளனர்.

சென்னை ஐஐடியில் 20 இன்டர் டிசிப்ளினரி கோர்ஸ் (Interdisciplinary course) உள்ளது. மாணவர்கள் இரண்டு ஆண்டு ஒரு பாடப்பிரிவினை படித்துவிட்டு, அதன் பின்னர் விரும்பும் பாடப்பிரிவு மற்றும் படிப்பினை இரட்டை பட்டம் பெறும் வகையில் தேர்வு செய்து படிக்கலாம். பிற பல்கலைக்கழகங்களும் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து யோசிக்க வேண்டிய காலக்கட்டம் வந்துள்ளது.

மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் அறிவியல் பாடங்களை படித்து வருகின்றனர். ஐஐடியில் சேர்ந்த பின்னர் அவர்கள் பாடத்துடன் தொடர்பு இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்தோம். இதனால் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் அந்தப் பாடத்திற்கு தொடர்புடையவற்றை கற்றுத் தருகிறோம். உலகத் தரத்தில் கல்வியை அளிக்கும் வகையிலும் மாணவர்களுக்கான சுமையை குறைக்கும் வகையில் அவர்களுக்கு உரிய கிரெடிட் குறைக்கப்பட்டுள்ளது.

Recreation Course: மாணவர்களுக்கு ரீகிரியேஷன் கோர்ஸ் (Recreation Course) கொண்டு வந்துள்ளோம். மாணவர்களுக்கான மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் இரண்டு பாடப்பிரிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கும் கிரெடிட் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் உடற்பயிற்சி, விளையாட்டு, நீச்சல், கலை உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபடும் வகையில் இந்த பாடப்பிரிவு வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘உன்னை நீ புரிந்து கொள்’ என்ற தலைப்பில் மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் வாழ்வது எப்படி? திறமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி? சுய கட்டுப்பாட்டுடன் வாழ்வது எப்படி? போன்றவற்றையும் கற்றுத் தருகிறோம். மாணவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் பாடத்திட்டத்திலும் சேர்த்துள்ளோம்.

மாணவர்கள் தொழில் முனைவோர்: மூன்றாவது மற்றும் நான்காவது பருவத்தில் மாணவர்களை தொழில் முனைவோராக உருவாக்குவதற்கான பாடத்திட்டத்தை சேர்த்துள்ளோம். இந்த ஆண்டு 100 தொழில் முனைவோர்களை உருவாக்குவதென திட்டமிட்டுள்ளோம். மூன்று நாளைக்கு ஒரு ஸ்டார்ட் அப் உருவாக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள் படிக்க வேண்டுமென வருகின்றனர். அவர்களுக்கு தொழில் முனைவோராக வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்காக மூன்று மற்றும் நான்காம் பருவத்தில் பாடத் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம்.

மேலும், மாணவர்கள் இதில் கற்பிக்கப்படும் பாடத்தை புரிந்து கொண்டு தொழில் செய்வதற்கு முயற்சிக்கும் பொழுது அதற்கான வழிகளையும், தொழிலில் ஈடுபடும் பொழுது மேற்கொள்ள வேண்டிய சிரமங்களையும் கற்றுத் தரப்போகிறோம். இதனால் ஸ்டார்ட் அப் 100 வெற்றி பெறும் என்பது தீவிர நம்பிக்கையாக உள்ளது.

எலக்டிவ் அறிமுகம்: எலக்டிவ் பாடத்தில் விளையாட்டுப் பிரிவில் 5 தேசிய விளையாட்டு வீரர்கள் சென்னை ஐஐடியில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர். இவர்களுக்காகவும், மற்ற மாணவர்களுக்காகவும் விளையாட்டு தொடர்புடைய எட்டு எலக்டிவ் பாடப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு விளையாட்டுப் பிரிவின் கீழ் மாணவர்களை சேர்த்ததால் விளையாட்டு தொடர்பான எலக்டிவ் அறிமுகம் செய்துள்ளோம். உலகத் தரத்தில் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்துள்ளோம். இதன் பலன் நான்காண்டுகள் கழித்து தெரியும். மேலும், மாணவர்கள் உலக அளவில் நல்ல முறையில் வெற்றி அடைந்து சாதிப்பார்கள் என நம்புகிறோம். இந்த ஆண்டு இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு கோர் டெக்னாலஜி படித்த மாணவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இன்டர்ஷிப்: கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், சாப்ட்வேர் தவிர சிவில், மெக்கானிக்கல், ஏரோபேஸ் தொழில்நுட்பங்களில் இன்டர்ன்ஷிப் கிடைக்கிறது. இது போன்ற பாடப்பிரிவுகள் தொழில் நிறுவனங்களுடன் தொடர்புடையதாக வந்துவிடும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு.

மேலும், பாடத்திட்டம் மாற்றத்தில் தொழில் நிறுவனங்களையும் ஈடுபடுத்தினோம். மத்திய அரசின் கல்வித் துறையில் அடுத்த தலைமுறை தொழில் முனைவோரை உருவாக்குவது குறித்து குழு அமைத்தனர். அந்தக் குழுவில் நான் உறுப்பினராக இருந்தேன். அந்தக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டவற்றையும் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளோம். தொழிற்சாலைக்குத் தேவையான வகையில் மாணவர்களை உருவாக்குவதால் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பு.

மேலும், சென்னை ஐஐடியில் தொழில் முனைவோர் மையம், நிர்மான் உள்பட பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன. மாணவர்களுக்கு வரும் பொருளை உற்பத்தி செய்வதற்கான ஐடியாவை வைத்து, அதனை பொருளாக மாற்றுவதற்கு யாரையும் எதிர்பார்க்காமல் ஐஐடி ஆராய்ச்சி மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சென்னை ஐஐடியில் ஸ்டார்ட் அப் 100 அறிவித்த பின்னர் அதிக அளவில் முதலீட்டாளர்கள் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். இளைஞர்களின் தொழில் முனைவராக நிறைய பேர் முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். சென்னை ஐஐடியில் மாற்றப்பட்ட பாடத்திட்டத்தை உலக அளவில் உள்ள பாடத்திட்டங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் உலக தரத்தில் பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

Research: ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிரதமர் ஆராய்ச்சி நிதி உதவி திட்டத்தில் இருந்து நிதி உதவி பெற்று வழங்கி வருகிறோம். ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை நிதி உதவி பெற்று வருவதால் ஆராய்ச்சி செய்ய அதிக அளவில் மாணவர்கள் வருகின்றனர்.

மேலும், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் கேரியர் பாத்வே சென்டர் (Career Pathway Center) துவங்கியுள்ளோம். மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு தருவது மட்டும் எங்கள் வேலை அல்ல. மாணவர்களின் திறனைக் கண்டுபிடித்து அவருக்கு சரியான தொழில் நிறுவனத்தை காண்பிக்கவும், அவர்களுக்குத் தேவையான தொழில் நிறுவனத்தை அழைத்து வந்து வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

பிஹெச்டி மற்றும் எம்எஸ் படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி மையம் துவக்கப்பட்டு, அதன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை ஐஐடியில் வித்யா சக்தி அல்லது கல்வி சக்தி என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவில் 504 மையங்களும், இலங்கை வடக்கு பகுதியில் 14 மையங்களும் ஆரம்பித்துள்ளோம். மாணவர்கள் உயர் கல்விக்கு வர வேண்டும் என்ற ஊன்றுதலை ஏற்படுத்தும் வகையில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஐஐடி பேராசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கிராமத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோரிடம் பேசி வருகிறார்கள்.

இதன்மூலம் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகியவற்றில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஐஐடி, ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுதி கிராமப்புறத்தில் இருந்து கடந்தாண்டு இரண்டு மாணவர்கள் சேர்ந்தனர். இந்தாண்டும் இரண்டு மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

வித்யா சக்தி அல்லது கல்வி சக்தி மூலம் ஐஐடியில் மாணவர்கள் சேர்வது எப்படி என்பது குறித்து கூறி வருகிறோம். இது 4 ,5 ஆண்டுகள் கழித்து பெரிய அளவில் பலனைத் தரும் என எதிர்பார்க்கிறோம். பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிக்கும் 30 ஆயிரம் மாணவர்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறோம்” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஐடிபிஐ வங்கியுடன் கைகோர்த்த ஐஐடி மெட்ராஸ்... அடுத்த மெகா திட்டம் என்ன தெரியுமா? - IITM launched cybersecurity lab

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.