ETV Bharat / state

40,000 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பணி ஆணை - தமிழக அரசு அறிவிப்பு! - Kalaignar kanavu illam scheme

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 11:58 AM IST

Kalaignar kanavu illam scheme: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள பயனாளிகளுக்கு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ஆணைகள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோப்பு படம்
கோப்பு படம் (Credits - ETV Bharat, TN RURAL DEVELOPMENT website)

சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் நடைப்பெற்ற சட்டமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 2010ஆம் ஆண்டில் குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை அடையும் வகையில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட தாகவும், தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி கிராம புறங்களில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசைகளில் மக்கள் வாழ்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை எய்திடும் வகையில், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், முதற்கட்டமாக 2024-25ஆம் நிதியாண்டில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் 3.50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என கூறியிருந்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாத பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவர் தம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்திருந்தார். இந்த புதிய திட்டம் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் வரும் நிதியாண்டில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என கூறியிருந்தார்.

அந்த வகையில் தமிழகம் முதுவதும் தகுதியுள்ள அனைத்து குடிசை வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் நோக்கத்துடன் குடிசைகளில் வசிக்கும் குடும்பங்களை மதிப்பீடு செய்வதற்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பயனாளிகளுக்கு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ஆணைகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

join ETV Bharat WhatsApp Channel Click here
join ETV Bharat WhatsApp Channel Click here (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கல்யாண ராணி சத்யாவுக்கு உடந்தையாக இருந்த தமிழ்செல்வியின் முன் ஜாமீன்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Matrimonial fraud

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.