ETV Bharat / state

திமுக இளைஞரணி மாநாட்டை கிண்டலடித்து பாடிய கடையநல்லூர் அதிமுக எம்எல்ஏ!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 8:24 PM IST

Kadayanallur mla criticized DMK: கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக இளைஞரணி மாநாட்டை பாடல் பாடி கிண்டல் செய்த சம்பவம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

கண்டன ஆர்ப்பாட்டத்தின் இடையே சிரிப்பலை
திமுக இளைஞரணி மாநாட்டை கலாய்த்து பாடல் பாடிய அதிமுக எம்எல்ஏ

தென்காசி: பட்டியலினப் பெண்ணை ஏமாற்றி மருத்துவப் படிப்பு படிக்க வைக்கிறேன் என்று கூறி அழைத்து வந்து, வீட்டு வேலை வாங்கியதுடன், கடுமையாக தாக்கிய திமுக பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க திமுக அரசு தவறியதாகக் கூறி, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில், இன்று (பிப்.01) தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு, தென்காசி தெற்கு மற்றும் வடக்கு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பாக திமுக உள்ளதாக கூறிக் கொண்டு, அவர்களை வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டை பாடல் பாடி கிண்டல் செய்த சம்பவம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ராமரை கும்பிடும் அனைவரும் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் - கே.பாலகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.