ETV Bharat / state

"சாலையில் கல்லை நட்டி, துணியைச் சுற்றி பூஜை செய்து, சிலை எனக் கூறும் அளவுக்கு மூடநம்பிக்கை நிலவுகிறது" - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

Anand Venkatesh: சாலை ஓரம் கல்லை நட்டு துணியை போர்த்தி, பூஜைகள் செய்து சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

madras high court
madras high court
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 9:32 PM IST

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் தனக்கு சொந்தமான நிலத்துக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள நடு கல்லை அகற்ற தாசில்தாரருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி சக்தி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

இதுகுறித்து புகார் அளித்த போது, இது உரிமையியல் பிரச்சினை என காவல் துறையினர் புகாரை முடித்து விட்டதாக மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "சாலையில் ஒரு கல்லை நட்டி, துணியைச் சுற்றி, பூஜைகள் செய்து, சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவதாக வேதனை தெரிவித்தார்.

சாலையில் நடப்பட்ட கல், சிலையா? இல்லையா? என உரிமையியல் நீதிமன்றம் முடிவெடுப்பது சாத்தியமற்றது. அதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில், எந்த நீதிமன்றமும் திருச்சபைக்கான அதிகார வரம்பை (ecclesiastical jurisdiction) பயன்படுத்துவதில்லை. இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் தொடர்ந்து நிலவி வருவது, மிகவும் துரதிஷ்டவசமானது.

இதற்காக வழக்கை விசாரிப்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயலாகும். மனுதாரரின் புகாரின் அடிப்படையில் சாலையில் நடப்பட்டுள்ள கல்லை ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும்" என பல்லாவரம் சரக காவல் உதவி ஆணையருக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: "துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை" - அமைச்சர் ராஜகண்ணப்பன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.