ETV Bharat / state

"ராகுல் காந்திக்கு எப்போதும் ஞானோதயம் தாமதமாக தான் வரும்" - ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் விமர்சனம்! - Governor CP Radhakrishnan - GOVERNOR CP RADHAKRISHNAN

Governor C.P. Radhakrishnan: கோயம்புத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இருந்து தங்களை வல்லுநர்கள் என்று கூறியவர்களுக்கு இவிஎம் மீதான சந்தேகம் போயிருக்கும் என நம்புகிறேன் எனவும், ராகுல் காந்திக்கு எப்போதும் ஞானோதயம் தாமதமாக தான் வரும் என்றும் விமர்சித்துள்ளார்.

ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், ராகுல் காந்தி
ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், ராகுல் காந்தி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 10:57 AM IST

கோயம்புத்தூர்: டெல்லியில் இருந்து திருப்பூர் செல்வதற்காக விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதை நடந்து முடிந்த இந்த நாடாளுமன்றத் தேர்தல் மீண்டும் நிரூபித்திருக்கிறது. பாரத தேசம் மகத்தான நாடாக முன்னேற வேண்டும் என்பதற்காக மக்கள் பிரதமர் மோடிக்கு மூன்றாவது முறையாக வாக்களித்து இருக்கிறார்கள்.

உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகம், இந்திய தேசம் தான் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து கொண்டு தங்களை வல்லுநர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு, மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது இருந்த சந்தேகம் முற்றிலுமாக போயிருக்கும் என நம்புகிறேன்" என்றார்.

திமுக மாநாடு தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "வெற்றி பெற்றவர்கள் கொண்டாடத்தான் செய்வார்கள். அதனால், தமிழகத்துக்கு நன்மையா இல்லையா என்பதை அடுத்து வருகின்ற தேர்தலில் தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.

சி.பி. ராதாகிருஷ்ணனை விட அண்ணாமலை குறைவான வாக்குகள் பெற்றது தொடர்பான கேள்விக்கு, புள்ளி விவரங்கள் ஒருபோதும் பொய் சொல்வதில்லை. புள்ளி விவரங்களை பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வார்கள். நான் உண்மையிலேயே அண்ணாமலையை பாராட்டுகிறேன். எந்த இடத்தில் விட்டோமோ அந்த இடத்திலேயே தொடங்கி இருக்கிறார். அண்ணாமலையின் கடுமையான உழைப்பை யாராலும் மறுக்க முடியாது. அந்த உழைப்புக்கு கிடைத்த உரிய மகத்தான ஓட்டுக்களாக தான் இதை பார்க்கிறேன்.

ஒரே ஒரு வருத்தம் இருக்கிறது. இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கும் நேரத்தில் கோயம்புத்தூர் போன்ற ஒரு மாநகரம் மற்ற மாநகரங்களோடு போட்டி போட்டு முன்னேற வேண்டும். தமிழகமும் மற்ற மாநிலங்களோடு போட்டி போட்டு முன்னேற வேண்டும். ஆனால் இந்திய வளர்ச்சியில் தானும் சேர்ந்து முன்னேறுவதற்கு பதிலாக ஒவ்வொரு முறையும் கோயம்புத்தூர் மக்கள் வேறு விதமாக முடிவெடுக்கிறார்கள். அந்த வளர்ச்சியோடு சேர்ந்து இந்த பயணத்தை தொடருவதற்கு வகை இல்லாமல் செய்து விடுகிறார்கள் என்ற வருத்தம் கொடுக்கிறது. என்னதான் ஒரு மகத்தான முன்னேற்றத்திற்காக நாம் சிந்தனை செய்தாலும், மக்கள் ஆதரவு தரும் வரை காத்திருக்க வேண்டும். அது தான் ஜனநாயகம் என்றார்.

2014 மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 20 வாரிசுகள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பான ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சி.பி. ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் எப்படிப்பட்ட விமர்சனத்தை வைக்கிறது என நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்றார்.

வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டு இருந்தால் பிரதமர் மோடி இரண்டு முதல் மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்து இருப்பார் என ராகுல் காந்தி பேசியது தொடர்பான கேள்விக்கு, ராகுல் காந்திக்கு எப்போதும் ஞானோதயம் தாமதமாக தான் வரும் என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மதம், இனம் சார்ந்த பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கண்டனம் தொடர்பான கேள்விக்கு, மோகன் பகவத் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் எதிர் சிந்தனைகள் என்பது இருக்கத்தான் வேண்டும். ஆனால், அதுவே நாட்டின் நலனுக்கு எதிரானதாக, முன்னேற்றத்திற்கு எதிரானதாக எதிர்மறை சிந்தனையாக மாறிவிடக்கூடாது என்பதை எல்லோரும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்ற போது உணர்ச்சிவையப்பட்டு, தங்களது கருத்துக்களை வைத்து விடக்கூடாது.

நல கருத்துக்களை மட்டுமே வைக்க வேண்டும் என்பதைத் தான் சொல்லி இருக்கிறார் என்றார். பாஜக முன்னாள் மாநில தலைவர் மற்றும் இந்நாள் மாநில தலைவர் இடையேயான கருத்து மோதல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பாஜகவினர் பேசுவது தொடர்பான கேள்விக்கு, இந்த கேள்வியை அண்ணாமலையிடம், முன்னாள் மாநில தலைவர்களிடம் கேளுங்கள். அவர்கள் கூறுவார்கள். ஆனால் நான் இந்த பொறுப்பில் இருந்து கொண்டு இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது நாகரீகமாக இருக்காது" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புதிய தலைவரைத் தேடுகிறதா தமிழக பாஜக? அண்ணாமலை மீதான அதிருப்தியால் முடிவு என தகவல்! - TN BJP looking for a new leader

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.