ETV Bharat / state

பொள்ளாச்சியில் பிரபல கோழிப்பண்ணை அலுவலகத்தில் ஐடி ரெய்டு.. ரூ.32 கோடி சிக்கியதா? - POLLACHI IT RAID - POLLACHI IT RAID

Pollachi Income Tax Raid: பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் பிரபல கோழிப்பண்ணையின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய நடத்திய சோதனையில், இதுவரை ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollachi Income Tax Raid
Pollachi Income Tax Raid
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 3:28 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் அருள் முருகன் மற்றும் சரவண முருகன் ஆகியோரது பிரபல கோழிப்பண்ணை இயங்கி வருகிறது. அதனுடைய தலைமை அலுவலகம் பொள்ளாச்சி வெங்கடேச காலனியில் அமைந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று (ஏப்.8) நள்ளிரவு முதல் இவர்களது அலுவலகம் மற்றும் பண்ணை உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரி சக்திவேல் தலைமையிலான குழு, விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில், அலுவலகத்தில் வைத்திருந்த சுமார் ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், வருமான வரித்துறையினரின் சோதனையானது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.32 கோடியையும், பொள்ளாச்சியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் இந்திய மாணவர் பலி! ஒரு வாரத்தில் 2வது சம்பவம்! தொடரும் இந்தியர்களுக்கு எதிரான வன்முறை! மத்திய அரசின் நடவடிக்கை என்ன? - Indian Student Dies In US

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.