ETV Bharat / state

வாகைப்பூவுக்கு அதிகரிக்கும் மவுசு.. விஜய்க்கு வெற்றி வாகை சூடுமா வாகைப்பூ? தவெக கொடியின் மூலம் தெரிவிப்பது என்ன? - Vijay TVK Flag

Vijay TVK Flag: தவெக கொடியை இன்று விஜய் அறிமுகம் செய்துள்ள நிலையில், அக்கொடியில் இடம்பெற்றுள்ள வாகைப்பூ குறித்த வரலாற்றை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

விஜய் த.வெ.க கொடி
விஜய் தவெக கொடி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 3:09 PM IST

சென்னை: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். உடனடியாக தவெக பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த், இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்தார். கட்சியை பிரபலப்படுத்தும் வேலையில் மும்முரமாக விஜய் இறங்கினார். மேலும், கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தவெகவின் அடுத்த கட்ட நகர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், இன்று கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி வைத்து, பாடலையும் வெளியிட்டுள்ளார். தவெக பாடலுக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளதாகவும், பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விஜய் அரசியல் கட்சிக் கொடி எந்த வண்ணத்தில் இருக்கும் என்பது முதல் பல்வேறு கேள்விகள், கட்சிக் கொடி அறிவிப்பு குறித்து தகவல் வெளியானது முதல் எழுந்து வந்தது.

இறுதியாக இன்று தவெக கட்சிக் கொடியை விஜய் வெளியிட்டார். மேல் மற்றும் கீழ் பக்கம் சிகப்பு வண்ணத்திலும், நடுவில் மஞ்சள் வண்ணமும் இடம்பெற்றுள்ளது. மேலும், கொடியின் மஞ்சள் பகுதியில் இரு பக்கமும் போர் யானைகளும், அதன் நடுவே வாகைப்பூவும், அதனைச் சுற்றி நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.

பொதுவாக சிவப்பு நிறம் வேகத்தையும், ஒரு விதமான ஆக்ரோஷ மனநிலையையும் குறிக்கும். மஞ்சள் என்பது அமைதியைக் குறிக்கும். அதேபோல், வாகைப்பூ என்பது போரில் வெற்றி பெற்ற மன்னர்களுக்கு வழங்கப்படுவதாகும். சங்க கால இலக்கியங்கள் புறநானூறு படி, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

புறநானூறில் வாகைப்பூ குறித்து இடம்பெற்றுள்ள வரிகள், “சூடினான் வாகைச் சுடர்த்தெரியல் பாடினார் வெல்புகழைப் பல்புலவர்” என்பதாகும். மேற்குறிப்பிட்டுள்ள வரிகளின் பொருள், "வேந்தன் வாகைத் தலைமாலை சூடிக்கொண்டு போர்க்களத்தில் பகைவரைத் தாக்கி வென்று வாகை சூடினான், புலவர்கள் அவன் புகழைப் பாடினர்" என்பதாகும்.

தவெக கொடி பின்னணியில் உள்ள வரலாற்றை மாநாட்டில் கூறுவேன் என விஜய் தெரிவித்துள்ளார். விஜயின் கட்சிக் கொடியில் வாகைப்பூ இடம்பெற்றுள்ள நிலையில், வாகைப்பூவுக்கு இனி அதிக தேவை இருக்கும் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தமிழக வெற்றிக் கழகம் மாநாடு எப்போது? - கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய பின் விஜய் கூறிய தகவல் - tamizhaga vettri kazhagam Flag

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.