ETV Bharat / state

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி? - வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை! - low pressure in bay of bengal - LOW PRESSURE IN BAY OF BENGAL

TN rain update: வரும் 22ஆம் தேதி, தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ய்ப்பு உள்ளதாகவும், இதனால் மே 23 இல் மத்திய வங்கக் கடல், மே 24ஆம் தேதி வடக்கு வங்கக் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

tamilnadu rain related image
மழை தொடர்பான புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 2:08 PM IST

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கோடை வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இன்று (மே 20) வரை தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று கூறியிருந்த வானிலை ஆய்வு மையம், ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

இந்நிலையில் இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் 22ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இது முதலில் வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24ஆம் தேதி காலை மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால் மே 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வரும் 23ஆம் தேதி காலை முதல் மத்திய வங்கக் கடலில் மணிக்கு 40-50 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

வரும் 24ஆம் தேதி காலை முதல் வடக்கு வங்கக் கடலில் மணிக்கு 50-60 கி.மீ., வேகத்திலும் இடையே 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசக் கூடும். மே 23ஆம் மத்திய வங்கக் கடல், மே 24ஆம் வடக்கு வங்க கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

எனவே, மீனவர்கள் மே 23ஆம் தேதி முதல் மத்திய வங்கக் கடலுக்கும், மே 24ஆம் தேதி முதல் வடக்கு வங்கக் கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்றும். மேலும் கடலுக்குச் சென்ற மீனவர்கள் மே 23ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி: கோபி அருகே குளம் உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளநீர்... பொதுமக்கள் அச்சம் - TN RAIN FLOOD UPDATE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.