ETV Bharat / state

சமூக வலைதளத்தில் வெளியான இந்தியன் 2 படக் காட்சிகள்; படக்குழுவினர் சென்னை காவல் ஆணையரிடம் புகார்! - இந்தியன் 2

Indian 2 Movie Scenes: வடசென்னை பகுதிகளில் நடைபெற்று வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு காட்சிகளைச் சிலர் சமூக வலைத்தளத்தில் சட்ட விரோதமாக வெளியிட்டு வருவதாக இந்தியன் 2 படக் குழுவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

சமூக வலைதளத்தில் வெளியான இந்தியன் 2 படக் காட்சிகள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 4:09 PM IST

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் பல்வேறு இடங்களில் விறுவிறு என நடைபெற்று வருகிறது.

தற்போது வடசென்னை, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சென்னையில் திருவொற்றியூர், பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடிசை மாற்று வாரிய வீட்டுச் சுவர்களில் இந்தியன் தாத்தா ஓவியங்கள் வரையப்பட்டு படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியன் 2 படக் குழுவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். வடசென்னை பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு காட்சிகளைச் சிலர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பாகச் சக்தி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் சில காட்சிகளை விஷமிகள் சிலர் செல்போன் மூலமாக வீடியோ பதிவு செய்து, அதனைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் புகார் குறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது முதல் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு தொழில்நுட்பக் கலைஞர் உயிரிழந்தது, கரோனா எனப் பல பிரச்சனைகளைப் படக்குழுவினர் எதிர்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை சுவர்களில் காட்சியளிக்கும் இந்தியன் தாத்தா.. திரையில் எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.