ETV Bharat / state

வைகை அணையில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு! - Two students drowned in vaigai Dam - TWO STUDENTS DROWNED IN VAIGAI DAM

Two students drowned in Vaigai Dam: வைகை அணையில் குளிக்கச் சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவர்கள், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 1:44 PM IST

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த வேல்ராஜ் என்பவரது மகன் லோகேஷ்வரன் மற்றும் செல்வம் என்பவரது மகன் சுந்தரபாண்டி. இவர்கள் இருவரும் இரண்டு வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். வாக்குப்பதிவு நாளான நேற்று பொது விடுமுறை என்பதால், மாலை வேளையில் தனது நண்பர்கள் சிலருடன் வைகை அணை முன்புறம் வைகை ஆற்றில் உள்ள தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளார்.

ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருக்கும் போது ஆற்று சுழலில் சிக்கி லோகேஸ்வரன் மற்றும் சுந்தரபாண்டி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களுடன் வந்த அவரது நண்பர்கள் உடனடியாக வைகை அணை காவல்துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, விரைந்து வந்த வைகை அணை காவல்துறை மற்றும் ராமலிங்கபுரத்தில் இருந்து வந்த மாணவர்களது உறவினர்கள் ஒன்று சேர்ந்து உடனடியாக தண்ணீரில் மூழ்கி இருவரின் உடலை மீட்டனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த வைகை அணை போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வைகை அணையில் குளிக்கச் சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவர்கள், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராமலிங்கபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: திருப்பத்தூர் அருகே திருமணம் மீறிய உறவு.. வீட்டை அடித்து நொறுக்கிய கணவர் குடும்பத்தினர்! - Tirupathur Crime

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.