ETV Bharat / state

இடி மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் பட்டியல் வெளியீடு- எந்த மாநிலத்தில் அதிக இறப்பு தெரியுமா? - List of death by lightning

List of death by lightning: இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டில் இடி மின்னல் தாக்க உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை வயதுவாரியாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இடி மின்னல் தாக்குதல் குறித்த கோப்புப்படம்
இடி மின்னல் தாக்குதல் குறித்த கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 10:57 PM IST

சென்னை: இந்தியாவில் இடி மின்னல் உள்ளிட்ட இயற்கை காரணிகளால் உயிரிந்தவர்களில் எண்ணிக்கை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், "கடந்த 2022 ஆம் ஆண்டு இடி மின்னல் உள்ளிட்ட இயற்கை காரணிகளால் 8 ஆயிரத்து 60 பேர் பலியாகி உள்ளனர்.

நாட்டில் அதிகபட்சமாக மின்னல் பாதிப்பால் மத்திய பிரதேச மாநிலத்தில் 496 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக 30 வயது முதல் 40 வயதுக்குள், 721 ஆண்கள், 270 பெண்கள், 1 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 992 பேர் இறந்துள்ளனர்" என தெரிவித்துள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் அடிப்படையில் இறப்பு பட்டியலையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் 35.8 சதவீதம் அதாவது 2 ஆயிரதது 887 பேர் இடி, மின்னலால் உயிரிழந்துள்ளனர். 9.1 சதவீதம் பேர் வெப்ப தாக்கத்தினாலும், 8.9 சதவீதம் பேர் அதிகபடியான குளிரால் உயிரிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இடி மின்னலால் கடந்த 2022ஆம் ஆண்டு அதிகபட்சமாக மத்திய பிரதேச மாநிலத்தில் 496 பேரும், பீகார் மாநிலத்தில் 329 பேரும், ஒடிசா மாநிலத்தில் 316 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 301, ஜார்கண்டில் 267 பேரும் என இந்தியாவில் அதிகபடியான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

வயது வாரியான இறப்புகளின் தரவுகள்:

  • 14 வயதுக்குட்பட்டவர்களில் ஆண்கள் 127 பேர், பெண்கள் 36 பேர் என மொத்தம் 163 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • 14 வயது முதல் 18 வயதுக்குள், ஆண்கள் 133 பேர், பெண்கள் 59 பேர் என மொத்தம் 192 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • 18 வயது முதல் 30 வயதுக்குள், ஆண்கள் 521 பேரும், பெண்கள் 170 பேரும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 692 பேர் இறந்துள்ளனர்.
  • 30 வயது முதல் 40 வயதுக்குள், ஆண்கள் 721 பேரும், பெண்கள் 270 பேரும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 992 பேர் இறந்துள்ளனர்.
  • 45 வயது முதல் 60 வயதுக்குள், ஆண்கள் 465 பேரும், பெண்கள் 193 பேர் என மொத்தம் 658 பேர் இறந்துள்ளனர்.
  • 60 வயதிற்கு மேற்பட்டவர்களுள், ஆண்கள் 149 பேரும், பெண்கள் 41 பேர் என மொத்தம் 190 பேர் இறந்துள்ளனர்.

மேலும், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்த இறப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.